இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து – அதிரடியாக வெளியேறிய நட்சத்திர வீரர்

Temba-Bavuma
- Advertisement -

இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் தற்போது தென்னாப்பிரிக்க அணியானது பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த டி20 தொடரானது சமநிலையில் முடிந்த வேளையில் அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியிடம் இழந்தது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.

- Advertisement -

அதன்படி முத்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய தென்னாப்பிரிக்க அணியானது இந்த டெஸ்ட் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 3-ஆம் தேதி துவங்கவுள்ளது.

இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக தற்போது தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா அந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த முதலாவது டெஸ்ட் போட்டியின் போது தொடை பகுதியில் காயமடைந்த தெம்பா பவுமா முதல் இன்னிங்சின் போது பேட்டிங் செய்ய வரவில்லை.

- Advertisement -

மேலும் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய போது அவர் பீல்டிங் செய்யவும் வரவில்லை. பின்னர் அவருக்கு செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் அவர் இரண்டு வாரங்கள் வரை ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அவர் இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இருந்து வெளியேறுகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : லெஜெண்ட் சங்ககாராவின் மாபெரும் சாதனையை உடைத்த கிங் கோலி.. யாராலும் தொட முடியாத புதிய உலக சாதனை

ஏற்கனவே இந்திய அணி இந்த முதலாவது போட்டியை இழந்துள்ள வேளையில் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை சமன் செய்ய முடியும். இல்லையெனில் இம்முறையும் டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்கா அணியிடம் இழக்க நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement