இப்படி தொடர்ந்து நடந்தா விளையாடவே விடமாட்டோம். சன் ரைசர்ஸ் அணியை பகிரங்கமாக எச்சரித்த – தெலுங்கானா MLA

Kavya-maran

இந்த வருடதிற்கான ஐபிஎல் தொடர் வருகின்ற ஏப்ரல் மே மாதங்களில் நடக்க இருக்கிறது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான மினி ஏலம் ஒன்று சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்தது. ஏலத்தில் பங்கெடுத்த அணிகள் தங்களது அணிக்கு ஏற்ப வீரர்களை தேர்ந்தெடுத்தனர்.அப்படி சன் ரைஸரஸ் ஹைதராபாத் மூன்று வீர்களை ஏலத்தில் எடுத்தது.புனேவைச் கேதர் ஜாதவை 2 கோடிக்கும், மைசூரை சேர்ந்த ஜகதீசன் சுச்சித்தை 30 லட்சத்திற்கும், அப்கானிஸ்தானை சேர்ந்த முஜிப் உர் ரஹ்மானை 1.5 கோடிக்கும் ஏலத்தில் எடுத்தது.

auction

இந்த நிலையில் எம்.எல்.ஏ தனம் நாகேந்தர் ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உள்ளூர் வீரர்களுக்கு சரியாக வாய்பளிக்கவில்லை. ஹைதராபாத்தை தனது பேரில் கொண்டிருக்கும் அணி ஏலத்தில் ஒரு உள்ளூர் வீரருக்கு கூட வாய்பு தரவில்லை என்று தனது அதிருப்தியை பத்திரிக்கையாளர்களிடம் வெளிப்படுத்தி உள்ளார்.

தெலுங்கானாவை சேர்ந்த எம்.எல்.ஏ தனம் நாகேந்தர் இதுபற்றி கூறியவை , “உள்ளூர் வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்குங்கள் இல்லையெனில் அணியின் பெயரை மாற்றிக் கொள்ளுங்கள் என்று தனது கண்டனத்தை கூறியுள்ளார். மேலும் ஹைதராபாத் அணியினர் வெளியூர் விரர்களுக்கு வாய்ப்பு வழங்குவது போல உள்ளூர் இளம் வீரர்களுக்கு இனி வரும் காலங்களில் வாய்ப்பு வழங்கியே ஆக வேண்டும்.

auction 1

இதே போக்கு நீடித்தால் ஹைதராபாத் அணி தனது பெயரை மாற்றி கொள்ள வேண்டும் மற்றும் கிரக்கெட் போட்டியை இங்கு நாங்கள் ஆதரிக்கவும் மாட்டோம் என்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

- Advertisement -

srh

சன் ரைஸர்ஸ் அணியின் உரிமையாளரான கலாநிதி மாறனின் மகள் மற்றும் அந்த அணியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு ஐ.பி.எல் ஏலத்தில் பங்கேற்றனர். மேலும் ஏற்கனவே பலமாக இருக்கும் சன் அணி தற்போது முக்கிய வீரர்களை தேர்வு செய்யாமல் அணிக்கு பேக்கப் வீரர்களை மட்டுமே இந்த ஏலத்தில் தேர்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.