உங்க சோதனையெல்லாம் போதும், மாற்றம் செய்யாமல் இருந்தாலே வெற்றி வரும் – டிராவிட், ரோஹித்தை சாடும் இந்திய வீரர்

Dravid
- Advertisement -

ஆசிய கோப்பை 2022 தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா பைனலுக்கு கூட தகுதி பெற முடியாமல் வீட்டுக்கு திரும்ப தயாராகியுள்ளது. ஆகஸ்ட் 27ஆம் தேதியன்று துவங்கிய இந்த தொடரின் லீக் சுற்றில் அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்தாலும் முக்கியமான அழுத்தம் நிறைந்த சூப்பர் 4 சுற்றில் வழக்கம்போல முக்கிய நேரங்களில் சொதப்பிய இந்தியா பரம எதிரியான பாகிஸ்தான் மற்றும் இலங்கையிடம் தோல்வியடைந்தது. அதனால் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா செப்டம்பர் 8ஆம் தேதியன்று நடைபெறும் ஆப்கானிஸ்தான் போட்டியை முடித்துக்கொண்டு வீடு திரும்ப தயாராகியுள்ளது.

IND vs SL

- Advertisement -

இத்தனைக்கும் பாகிஸ்தான், இலங்கை போன்ற இதர அணிகளை காட்டிலும் பேட்டிங், பவுலிங் என அனைத்து துறைகளிலும் அனுபவமும் திறமையும் கலந்த உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் நம்பர் ஒன் டி20 அணியாக திகழும் இந்தியா இப்படி பாதியிலேயே வெளியேறியுள்ளது தான் இந்திய ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக கடந்த டி20 உலகக் கோப்பைக்குப்பின் புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பற்ற ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் தலைமையில் இதுவரை பங்கேற்ற அத்தனை சாதாரண இருதரப்பு டி20 தொடர்களில் மிரட்டிய இந்தியா மினி உலகக்கோப்பையை போன்ற 6 அணிகள் பங்கேற்ற இந்த ஆசிய கோப்பையில் மண்ணைக் கவ்வியுள்ளது.

தேவையற்ற மாற்றங்கள்:
2014 முதல் உலக கோப்பை நாக்-அவுட் போட்டிகளிலும், 2021 டி20 உலக கோப்பையில் லீக் சுற்றுடன் வெளியேறியதிலிருந்து எந்த பாடத்தையும் முன்னேற்றத்தையும் இந்தியா காணவில்லை என்பதை இது தெளிவாக காட்டுகிறது. முன்னதாக புதிதாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் ஆகியோர் டி20 உலகக்கோப்பையை வெல்லும் தரமான வீரர்களை கண்டறியும் சோதனை முயற்சி என்ற பெயரில் கடந்த ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட ஒவ்வொரு தொடரிலும் ஒவ்வொரு போட்டியிலும் மாற்றங்கள் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

DK and Pant

ஒரு தொடரில் சிறப்பாக செயல்பட்ட சஞ்சு சம்சனை அடுத்த தொடரில் கழற்றி விட்டது, மிடில் ஆர்டரில் விளையாடக்கூடிய சூர்யகுமார் யாதவை தொடக்க வீரராக களமிறக்கியது போன்ற மாற்றங்கள் அதற்கு எடுத்துக்காட்டாகும். இந்த ஆசிய கோப்பையில் கூட ஜடேஜா விலகிய போது தீபக் ஹூடாவை மட்டும் சேர்த்திருக்கவேண்டிய அவர்கள் சம்பந்தமின்றி தினேஷ் கார்த்திக்கை கழற்றி விட்டனர்.

- Advertisement -

போதும் சாமி:
அதேபோல் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டிய அணியில் 3 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். அது ஏனென்று கேட்டால் உலக கோப்பைக்கு முன்பாக சோதனை முயற்சி என்று ரோகித் சர்மா பதிலளித்தார். ஆனால் இதுபோன்ற சோதனை முயற்சிகளை ஒன்று சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் அல்லது அடுத்ததாக நடைபெறும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் செய்து பார்க்கலாமே? ஆசிய கோப்பை போன்ற பெரிய தொடர் தான் கிடைத்ததா என்று ரசிகர்கள் நியாயமான கேள்வியை எழுப்புகின்றனர்.

dravid 1

இந்நிலையில் இதுபோன்ற தேவையற்ற மாற்றங்கள் தான் ஆசிய கோப்பையை தாரை வார்க்க காரணமாக அமைந்ததாக வேதனை தெரிவிக்கும் இந்திய வீரர் ராபின் உத்தப்பா உலகக்கோப்பைக்கு முன்பாக அடுத்ததாக நடைபெறும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காடி20 தொடர்களிலாவது இது போன்ற மாற்றங்களை நிகழ்த்தாமல் இருங்கள் என்று ரோகித் சர்மா – ராகுல் டிராவிட்டுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அனேகமாக இந்த அணி நிலைத்தன்மையில் தடுமாறுவதாக நான் உணர்கிறேன். இந்த அணிக்கு குறிப்பாக டி20 உலக கோப்பை போன்ற பெரிய தொடருக்கு முன்பாக நிலைத்தன்மை மட்டுமே தேவைப்படுகிறது. குறைந்தது அனைத்து வீரர்களையும் அவரவர் இடத்தில் வைத்து விளையாடினால் இந்த அணி மிகச் சிறந்த அணியாக இருக்கும். ஹர்திக் பாண்டியாவின் பணிச்சுமையை நிர்வகிப்பது முக்கியம் என்று எனக்கு தெரியும். அதனால் அவருக்கு ஓய்வு கொடுங்கள் அல்லது 2 ஓவர் மட்டும் கொடுங்கள்.

இதையும் படிங்க : இலங்கை அணிக்கு எதிரான மோசமான தோல்விக்கு ரோஹித் செய்த 2 தவறுகளே காரணம் – இர்பான் பதன் சாடல்

“ஆனால் உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு இந்த அணியில் மாற்றங்கள் செய்யாமல் அப்படியே விளையாடுங்கள். காயம் ஏற்படாத வரை ஒரு அணி மட்டுமே விளையாட வேண்டும். பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் வந்தபின் முழு பலம் நிறைந்த இந்திய அணி 5 – 6 போட்டிகளில் தொடர்ந்து விளையாடும் என்று நம்புகிறேன். எனவே உலக கோப்பைக்கு முன்பாக தயாராகி செல்லுங்கள்” என்று கூறினார்.

Advertisement