படுதோல்வியால் டாப் 2லிருந்து சரிந்த இந்தியா.. 2025 சாம்பியன்ஷிப் கனவு உடைக்கிறதா? செய்ய வேண்டியது

IND vs AUS 3
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா தலைமையில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனால் ரோகித் சர்மா தலைமையில் விளையாடிய இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் பகல் இரவாக நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 180, 175 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

2 இன்னிங்ஸிலும் முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக நித்திஸ் ரெட்டி தலா 42 ரன்கள் எடுத்தார். பந்து வீச்சில் சிராஜ், பும்ரா தலா 4 விக்கெட்டுகளை அதிகபட்சமாக எடுத்தார்கள். 337, 19/0 ரன்கள் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் கமின்ஸ் 7, ஸ்டார்க் 8 விக்கெட்டுகளை எடுத்தார்கள். பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட் 140 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

சரிந்த இந்தியா:

அதனால் 1 – 1* (5) என்ற கணக்கில் இத்தொடரை சமன் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது. மேலும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷி புள்ளிப்பட்டியலில் 60.71% புள்ளிகளுடன் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. மறுபுறம் படுதோல்வியை சந்தித்த இந்தியா 57.19% புள்ளிகளுடன் டாப் 2 இடத்திலிருந்து விழுந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

2வது இடத்தில் 59.26% புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா முன்னேறியுள்ளது. இருப்பினும். தற்போதைய நிலையில் அடுத்த 3 போட்டிகளிலும் வென்றால் 4 – 1 (5) என்ற கணக்கில் இந்தியா இத்தொடரை வெல்லும். அதன் வாயிலாக 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு மற்ற எந்த அணிகளின் உதவியை எதிர்பார்க்காமல் இந்தியா 64.05% புள்ளிகளுடன் நேரடியாக ஃபைனலுக்கு செல்லும்.

- Advertisement -

ஃபைனல் வாய்ப்பு:

அதே போல 2 வெற்றி 1 ட்ராவை சந்தித்தால் கூட 3 – 1 (5) என்ற கணக்கில் தொடரை வென்று 60.52% புள்ளிகளுடன் மற்ற அணிகளின் கைகளை பார்க்காமல் இந்தியா நேரடியாக ஃபைனலுக்கு செல்லலாம். ஆனால் அடுத்த 3 போட்டிகளில் ஒரு தோல்வியை சந்தித்தால் கூட இந்தியாவின் ஃபைனல் கனவு உடைய துவங்கி விடும்.

இதையும் படிங்க: இந்த ரிஸ்க் எடுத்து ஃபார்முக்கு வந்துட்டேன்.. இனிமேல் இந்தியாவுக்கு அடி தான்.. ஆட்டநாயகன் ஹெட் நம்பிக்கை

ஒருவேளை 3 – 2 என்ற கணக்கில் வென்றால் 58.77% புள்ளிகளுடன் 2வது அணியாக இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெறலாம். தென் ஆப்பிரிக்கா முதல் அணியாக தகுதி பெறும். ஒருவேளை 2 – 2 என்ற கணக்கில் தொடரை இந்தியா சமன் செய்தால் ஆஸ்திரேலியா ஃபைனலுக்கு செல்லும். இந்தியா வெளியேறும். அந்த வகையில் அடுத்த மூன்று போட்டிகளும் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Advertisement