- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சாம்சனுக்கு டாட்டா.. பும்ரா, ஷமி பேக்.. ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி வரும் பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் மண்ணில் துவங்கி நடைபெற உள்ளது. மினி உலகக் கோப்பை என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இந்தத் தொடரை கடைசியாக 2013ஆம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் தோனி தலைமையில் இந்தியா வென்றது. அதைத்தொடர்ந்து இம்முறை அந்தக் கோப்பையை வெல்வதற்காக ரோஹித் சர்மா தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அணியை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் ரோஹித் சர்மா ஜோடியாக அறிவித்தார்கள். அந்த அணிக்கு சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஏனெனில் சமீபத்திய போட்டிகளில் சுமாராகவே விளையாடிய அவர் ஐபிஎல் தொடரிலும் கேப்டனாக பெரியளவில் அசத்தியதில்லை.

- Advertisement -

சாம்பியன்ஸ் ட்ராபி:

அதே போல பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சய் சாம்சனை கழற்றி விட்டுள்ள அகர்கர் விக்கெட் கீப்பர்களாக கேஎல் ராகுல், ரிஷப் பண்ட்டை தேர்ந்தெடுத்துள்ளார். அத்துடன் சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரில் காயத்தை சந்தித்ததால் விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜஸ்ப்ரித் பும்ரா சாம்பியன்ஸ் டிராபியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

அவருடன் 2023 உலகக் கோப்பையில் சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்த முகமது ஷமி தேர்வு செய்யப்பட்டுள்ளது இந்திய அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. அவர்களுடன் 2024 டி20 உலகக் கோப்பை வெல்ல உதவிய அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மற்றபடி விராட் கோலி 2023 உலகக்கோப்பையில் அசத்திய ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

- Advertisement -

இந்திய அணி அறிவிப்பு:

அக்சர் படேல், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். குல்தீப் யாதவ் முதன்மை ஸ்பின்னராக ஜெய்ஸ்வால் பேக்-அப் துவக்க வீரராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இதே அணி அடுத்து நடைபெறும் இங்கிலாந்து ஒருநாள் தொடரிலும் விளையாட உள்ளது.

இதையும் படிங்க: சாம்சன் முன்னே போய்ட்டாரு.. தோனி லெவலில் இருக்கும் பண்ட் அந்த வாய்ப்புக்கு உழைக்கனும்.. கைப் அட்வைஸ்

அதில் ஹர்ஷித் ராணா மட்டும் எக்ஸ்ட்ராவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த அணியில் முகமது சிராஜ் கழற்றி விடப்பட்டுள்ளதும் உள்ளூரில் அசத்தும் கருண் நாயரை தேர்ந்தெடுக்கப்படாததும் சில ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி ஸ்ரேயாஸ் ஐயர் கே.எல். ராகுல் ஹர்திக் பாண்டியா அக்சர் பட்டேல் வாஷிங்டன் சுந்தர் குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரிஷப் பண்ட், யசஸ்வி ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா

- Advertisement -