உலகம் முழுவதிலும் 2025 புத்தாண்டை மக்கள் கோலாகலமாக வரவேற்று கொண்டாடி வருகிறார்கள். இந்த வருடத்தில் இந்திய கிரிக்கெட் அணி நிறைய வெற்றிகளை குவிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகும். இந்த புத்தாண்டில் இந்திய அணி 2 ஸ்பெஷல் தொடர்களில் விளையாட உள்ளது. குறிப்பாக பிப்ரவரி மாதம் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ளது.
அத்துடன் வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் ஆசிய கோப்பை தொடரிலும் இந்தியா விளையாட உள்ளது. இந்த வருடத்தை சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய பயணத்தை துவங்கும் இந்திய அணி தென்னாப்பிரிக்கா மண்ணில் நிறைவு செய்ய உள்ளது.
இந்திய அணியின் 2025 அட்டவணை:
ஜனவரி 3 – 7: இந்தியா – ஆஸ்திரேலியா, 5வது டெஸ்ட், சிட்னி
இந்தியா – இங்கிலாந்து (சொந்த மண்ணில் 5 டி20, 3 ஒன்டே)
ஜனவரி 22: முதல் டி20, சென்னை
ஜனவரி 25: 2வது டி20, கொல்கத்தா
ஜனவரி 28: 3வது டி20, ராஜ்கோட்
ஜனவரி 31: 4வது டி20, புனே
பிப்ரவரி 2: 5வது டி20, மும்பை
பிப்ரவரி 6: முதல் ஒன்டே, நாக்பூர்
பிப்ரவரி 9: 2வது ஒன்டே, கட்டாக்
பிப்ரவரி 12: 3வது ஒன்டே, அஹ்மதாபாத்
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025:
பிப்ரவரி 20: இந்தியா – வங்கதேசம், துபாய்
பிப்ரவரி 23: இந்தியா – பாகிஸ்தான், துபாய்
மார்ச் 2: இந்தியா – நியூஸிலாந்து, துபாய்
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (தகுதி பெற்றால்) ஜூன் 2025, லார்ட்ஸ், லண்டன்
இந்தியாவில் ஆசிய கோப்பை:
இங்கிலாந்து – இந்தியா (5 டெஸ்ட் இங்கிலாந்து மண்ணில்)
முதல் டெஸ்ட்: ஜுன் 20 – 24, ஹண்டிங்லே
2வது டெஸ்ட்: ஜூலை 2 – 6, எட்ஜ்பஸ்டன்
3வது டெஸ்ட்: ஜுன் 10 – 14, லார்ட்ஸ்
4வது டெஸ்ட்: ஜுன் 23 – 27, மான்செஸ்டர்
5வது டெஸ்ட்: ஜூலை 31 – ஆகஸ்ட், ஓவல்
இதையும் படிங்க: இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் 3 முக்கிய வீரர்களுக்கு ஓய்வு – விவரம் இதோ
வங்கதேசம் – இந்தியா: ஆகஸ்ட் மாதம், வங்கதேச மண்ணில் 3 ஒன்டே மற்றும் 3 டி20
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ்: அக்டோபர் மாதம், சொந்த மண்ணில் 2 டெஸ்ட்
ஆசிய கோப்பை (டி20 ஃபார்மட்): அக்டோபர் – நவம்பர் 2025 மாதம் சொந்த மண்ணில்
தென் ஆப்பிரிக்கா – இந்தியா: நவம்பர் – டிசம்பர் மாதங்களில், தென் ஆப்பிரிக்கா மண்ணில், 2 டெஸ்ட், 3 ஒன்டே, 5 டி20



