ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரானது எதிர்வரும் 5 ஆவது டெஸ்ட் போட்டியுடன் அதாவது ஜனவரி 7-ஆம் தேதி உடன் முடிவடைய உள்ளது.
ஓய்வளிக்கப்பட வாய்ப்புள்ள இந்திய வீரர்கள் :
அதற்கு அடுத்ததாக இந்திய அணி சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக டி20 போட்டிகளிலும், அதன்பிறகு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி விளையாட இருக்கிறது.
அதன்படி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜனவரி 22-ஆம் தேதி முதல் பிப்ரவரி இரண்டாம் தேதி வரை இருக்கிறது. அதற்கு அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி துவங்கி 12-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கெதிரான இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஏனெனில் பிப்ரவரி மாதம் இறுதியில் சாம்பியன் டிராபி தொடரானது துவங்க இருப்பதால் அவர்கள் மூவருக்கும் தேவையான ஓய்வு அளிக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் தொடர்ச்சியாக விளையாடி வருவதால் பும்ராவுக்கு பணிச்சுமை காரணமாக ஓய்வு கொடுப்பதில் தவறு ஏதுமில்லை.
இதையும் படிங்க : ஜெய்ஸ்வால் சூப்பர்ஸ்டார்.. வாசிம் அக்ரம், மெக்ராத் செய்யாத இதை செஞ்ச பும்ரா அடுத்த கேப்டன்.. டேரன் லேமன்
ஆனால் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய தொடரில் ஃபார்ம் அவுட்டாகி இருக்கும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவிற்கு ஏன் ஓய்வு அளிக்க வேண்டும்? என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.



