ஜெய்ஸ்வால் சூப்பர்ஸ்டார்.. வாசிம் அக்ரம், மெக்ராத் செய்யாத இதை செஞ்ச பும்ரா அடுத்த கேப்டன்.. டேரன் லேமன்

Darren Lehman 2
- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1 என்ற கணக்கில் இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது. அதனால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இந்தியா நழுவ விட்டுள்ளது. இருப்பினும் இந்த தொடரில் ஜஸ்ப்ரித் பும்ராவின் அற்புதமான பவுலிங் மட்டுமே இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்து.

சொல்லப்போனால் இந்த தொடரில் அவர் மட்டுமே இந்தியாவுக்கு தனி ஒருவனாக பவுலிங் துறையில் வெற்றிக்கு போராடி வருகிறார். இதுவரை 4 போட்டிகளில் 30* விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற ஒரு தொடரின் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார். அது போக ஆஸ்திரேலிய மண்ணில் அதிக விக்கெட்டுகள் எடுத்த ஆசிய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.

- Advertisement -

மகத்தான பும்ரா:

மேலும் 147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை 20க்கும் குறைவான சராசரியில் எடுத்த முதல் வீரராகவும் பும்ரா சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் வாசிம் அக்ரம், கிளன் மெக்ராத்தை விட ஜஸ்ப்ரித் பும்ரா போல ஒரு குறிப்பிட்ட தொடரில் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் பவுலரை தாம் பார்த்ததில்லை என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மற்றும் பயிற்சியாளர் டேரன் லேமன் பாராட்டியுள்ளார்.

மேலும் இதே தொடரில் முதல் முறையாக விளையாடும் 22 வயது ஜெய்ஸ்வால் அடுத்த சூப்பர்ஸ்டார் என்றும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி லேமன் பேசியது பின்வருமாறு. “ஜெய்ஸ்வால் சூப்பர்ஸ்டார். நான் பார்த்த சிறந்த வீரர்களில் ஒருவர். அவரும் இங்கிலாந்தின் ஹரி ப்ரூக்கும் அடுத்த தலைமுறையின் 2 தரமான வீரர்கள். அவர்கள் மக்கள் அமர்ந்து பார்த்து நல்ல வீரர்கள் என்று பாராட்டக் கூடியவர்கள்”

- Advertisement -

அடுத்த கேப்டன்:

“மெல்போர்ன் போட்டியில் சிறப்பாக விளையாடிய அவர் பெர்த்தில் அபாரமாக பேட்டிங் செய்தார். அவர் இத்தொடரில் பாய்ச்சல்கள் மற்றும் எல்லைகளைக் கடந்த வந்துள்ளார். ரோஹித் முடிக்கும் போது பும்ராவை அடுத்த கேப்டனாக நான் தீர்மானிப்பேன். ஏனெனில் அவர் முதல் போட்டியில் நல்ல வேலையை செய்தார்”

இதையும் படிங்க: நீங்க நல்ல கிரிக்கெட்டை ஆடுனா.. காசு கொடுத்து அதை செய்யத் தேவையில்லை.. தல தோனி பளிச்

“அவர் நான் நேராக பார்த்த மிகவும் சிறந்த பவுலர். இதற்கு முன் வாசிம் அக்ரம், கிளன் மெக்ராத் ஆகியோரை நான் பார்த்துள்ளேன். ஆனால் ஒரு குறிப்பிட்ட தொடரில் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் பும்ரா போன்ற பவுலரை நான் பார்த்ததே இல்லை. 2014 – 15 ஆஷஸ் தொடரில் மிட்சேல் ஜான்சன் மட்டுமே அவ்வாறு இருந்தார். ஏற்கனவே இத்தொடரில் 30 விக்கெட்டுகள் எடுத்துள்ள அவர் பார்ப்பதற்கு அற்புதமானவர். வாய்ப்பு கிடைக்கும் போது அவர் இந்தியாவுக்காக சிறந்த கேப்டனாக செயல்படுவார்” என்று கூறினார்.

Advertisement