ஐசிசி 2026 மகளிர் டி20 உ.கோ: இந்தியாவின் அட்டவணை வெளியீடு.. பாகிஸ்தானுடன் மோதல் எப்போது?

Team India Women
- Advertisement -

ஐசிசி 2026 மகளிர் டி20 உலகக் கோப்பை இங்கிலாந்து மண்ணில் நடைபெற உள்ளது. 2009 முதல் நடைபெற்று வரும் அந்தத் தொடரில் ஆஸ்திரேலியா 6 முறை கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக ஜொலிக்கிறது. நடப்புச் சாம்பியனாக நியூசிலாந்து திகழும் நிலையில் இந்தியா ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. இந்நிலையில் 2026 டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

வரலாற்றில் 10வது முறையாக நடைபெற உள்ள அந்தத் தொடரில் உலகின் டாப் 12 கிரிக்கெட் அணிகள் விளையாட உள்ளன. அந்த 12 அணிகளும் குரூப் ஏ மற்றும் குரூப் பி ஆகிய 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா ஆகிய வலுவான அணிகளும் உள்ளன.

- Advertisement -

அட்டவணை வெளியீடு:

அது போக தகுதி சுற்றில் வென்று வரும் 2 அணிகளும் இந்தியாவுடன் மோத உள்ளது. குரூப் பி பிரிவில் தொடரை நடத்தும் இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் 2 தகுதி சுற்று அணிகள் இடம் பிடித்துள்ளன. இத்தொடரில் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

அதன் முடிவில் புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடங்களைப் பிடிக்கும் தலா 2 அணிகள் செமி ஃபைனலுக்கு தகுதி பெறும். அதைத்தொடர்ந்து ஜூன் 30, ஜூலை 2 ஆகிய தேதிகளில் லண்டன் ஓவல் மைதானத்தில் 2 செமி ஃபைனல் போட்டிகள் நடைபெறும். அதில் வெற்றி பெறும் 2 அணிகள் ஜூலை 5ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தும்.

- Advertisement -

இந்தியாவின் அட்டவணை:

இந்தத் தொடரில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியிலேயே பரம எதிரி பாகிஸ்தானை ஜூன் 14ஆம் தேதி எதிர்கொள்கிறது. ஐசிசி 2026 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் அட்டவணை (அனைத்துப் போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு துவங்கும்):
ஜூன் 14: இந்தியா – பாகிஸ்தான், எட்ஜ்பஸ்டன்
ஜூன் 17: இந்தியா – தகுதி சுற்று அணி 1, ஹெண்டிங்லே

இதையும் படிங்க: இனிமேல் இந்தியாவுக்கு விராட் கோலியின் இடத்தில் அவர் தான் ஆடுவாரு.. 3வது இடம் மட்டுமே பாக்கி.. பண்ட் அறிவிப்பு

ஜூன் 21: இந்தியா – தென் ஆப்பிரிக்கா, ஓல்ட் டிராபோர்ட்
ஜூன் 25: இந்தியா – தகுதி சுற்று அணி 2, ஓல்ட் டிராபோர்ட்
ஜூன் 28: இந்தியா – ஆஸ்திரேலியா, லார்ட்ஸ், லண்டன்
ஜூன் 30: செமி ஃபைனல் 1, ஓவல், லண்டன்
ஜூலை 2: செமி ஃபைனல் 1, ஓவல், லண்டன்
ஜூலை 5: ஃபைனல், லார்ட்ஸ், லண்டன்

Advertisement