அதுக்காக ஆஸி தொடருக்கு நடராஜன் மாதிரி பவுலர்களை ரெடியா வெச்சுக்கோங்க.. பரத் அருண் அட்வைஸ்

Bharat Arun
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2018 – 19, 2020 – 21 ஆகிய அடுத்தடுத்த தொடர்களை இந்தியா வென்றது. எனவே இம்முறை சர்மா தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

அந்தத் தொடருக்காகவே அடுத்ததாக நடைபெறும் துலீப் கோப்பையில் பும்ரா, ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு பிசிசிஐ ஓய்வு கொடுத்துள்ளது. அதே போல முகமது ஷமி காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார். அதனால் ஆஸ்திரேலிய மண்ணில் இம்முறை இந்தியா மிகவும் வலுவான அணியுடன் களமிறங்குவதற்கு தயாராகி வருகிறது.

- Advertisement -

நடராஜன் மாதிரி பவுலர்கள்:

இந்நிலையில் கடந்த தொடரைப் போல இம்முறையும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு நடராஜன் போன்ற 140 – 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் வேகப்பந்து வீச்சாளர்களை தயாராக வைத்துக் கொள்ளுமாறு இந்திய அணிக்கு முன்னாள் பயிற்சியாளர் பரத் அருண் ஆலோசனை தெரிவித்துள்ளார். ஏனெனில் முக்கிய வீரர்கள் காயமடையும் போது தொடர்ந்து சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலியாவை சாய்ப்பதற்கு இளம் வீரர்கள் தயாராக இருப்பது அவசியம் என்று இந்திய அணியை அவர் எச்சரித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இது சரியான வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து ஆஸ்திரேலிய தொடருக்கு தயாராக வைத்திருக்கிறோமா என்பதைப் பற்றிய கேள்வியாகும். ஐபிஎல் தொடரில் 140 – 150 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடிய நிறைய பவுலர்கள் நம்மிடம் உள்ளனர். எனவே அவர்களுக்கு வாய்ப்பளித்து வளர்ப்பது முக்கியம்”

- Advertisement -

தயாராக இருக்கனும்:

“சிலர் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக இருப்பார்கள். எனவே அந்த வீரர்கள் உள்ளூர் சிவப்பு நிற பந்து கிரிக்கெட்டில் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். நம்மிடம் நேரம் உள்ளது. எனவே அவர்களுக்கு உள்ளூரில் நிறைய ஓவர்களை கொடுத்து தயாராக வைத்திருப்பது அவசியம்” என்று கூறினார். அவர் கூறுவது போல 2020 – 21 தொடரில் நடராஜன் நெட் பவுலராக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

இதையும் படிங்க: தோனி டி.ஆர்.எஸ் முடிவுகளை எடுப்பதில் கில்லாடி.. ஏன் தெரியுமா? – அம்பயர் அணில் சவுத்ரி பேட்டி

அப்போது காபாவில் நடைபெற்ற கடைசிப் போட்டிக்கு முன் ஷமி, பும்ரா உள்ளிட்ட முக்கிய பவுலர்கள் காயமடைந்து வெளியேறினர். அந்த நேரத்தில் வாய்ப்பை பெற்ற நடராஜன் மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் சரித்திர வெற்றியில் பங்காற்றினார். அதே போல 2024 ஐபிஎல் தொடரில் 17 விக்கெட் எடுத்து அசத்திய நடராஜன் நல்ல ஃபார்மில் இருக்கிறார். இருப்பினும் அவருக்கு துலீப் கோப்பையில் கூட வாய்ப்பு கிடைக்காதது குறிப்பிடத்தக்கது.

Advertisement