புதிய வருடத்தில் சாதனைகள் நிகழுமா.. 2024 புத்தாண்டில் இந்திய அணியின் முழு அட்டவணை இதோ

Team India 2024
- Advertisement -

உலகம் முழுவதிலும் கோலாகலமாக பிறந்துள்ள 2024 புத்தாண்டில் அனைவரும் புது முயற்சிகளை போட்டு வெற்றிகளை காண்பதற்காக தயாராகியுள்ளனர். அந்த வகையில் 2023 காலண்டர் வருடத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை தொடர்களில் ஏமாற்ற தோல்விகளை சந்தித்த இந்தியா அதிலிருந்து பாடங்களை கற்று 2024 சர்வதேச கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி வெற்றிகளை குவிப்பதற்கு தயாராகியுள்ளது.

இந்நிலைமையில் 2024 காலண்டர் வருடத்தில் இந்தியா விளையாடும் போட்டிகளின் அட்டவணைகளை பற்றி பார்ப்போம். இந்த அட்டவணைகளுக்கிடையே திடீரென்று இருநாட்டு வாரியங்கள் உடன்பட்டு சில தொடர்கள் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளது. இருப்பினும் இது தான் 2024ஆம் ஆண்டு காலண்டர் வருடத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் அடிப்படை முதன்மை அட்டவணையாகும்.

- Advertisement -

தற்போது தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்திய அணி ஜனவரி 3ஆம் தேதி நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக நடைபெறும் இத்தொடர் ஜனவரி 11, 14, 17 ஆகிய தேதிகளில் மொகாலி, இந்தூர், பெங்களூரு ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது.

அதைத்தொடர்ந்து 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. வரும் ஜனவரி 25, பிப்ரவரி 2, 15, 23, மார்ச் 7 ஆகிய தேதிகளில் ஹைதராபாத், விசாகப்பட்டினம் ராஜ்கோட், ராஞ்சி, தரம்சாலா ஆகிய நகரங்களில் இந்த 5 போட்டிகள் நடைபெற உள்ளது.

- Advertisement -

அதை முடித்துக்கொண்டு ஐபிஎல் தொடரில் விளையாட உள்ள இந்திய வீரர்கள் அடுத்ததாக ஜூன் 4 – 30ஆம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க மண்ணில் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாட உள்ளனர். அதன் பின் இலங்கைக்கு எதிராக ஜூலை மாதம் தங்களுடைய சொந்த மண்ணில் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட 2 தொடர்களில் இந்தியா விளையாட உள்ளது. அதைத்தொடர்ந்து வங்கதேசத்துக்கு எதிராக செப்டம்பரில் தங்களுடைய சொந்த மண்ணில் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக 2 டெஸ்ட் போட்டிகள் தொடர் தொடரில் இந்தியா விளையாட உள்ளது.

இதையும் படிங்க: சுப்மன் கில்லோட டெஸ்ட் இடத்துக்கு ஆபத்து வந்தாச்சு.. அவரோட இடத்தை பிடிக்க 2 பேர் இருக்காங்க – தினேஷ் கார்த்திக் எச்சரிக்கை

அதன் பின் மீண்டும் நியூசிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் அக்டோபர் மாதம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. இறுதியாக டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்கும் இந்தியா அங்கு 5 போட்டிகள் கொண்ட சவாலான பார்டர் – கவாஸ்கர் கொப்பை டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ஜுலைக்கு பின் நடைபெற உள்ள தொடர்களின் முழு அட்டவணை பின்னர் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement