IND vs WI : 200வது போட்டியில் நம்பர் ஒன் அணியான இந்தியாவுக்கு வரலாற்றில் முதல் முறையாக – நேர்ந்த பரிதாபம்

IND vs WI 2
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை வென்ற இந்தியா அடுத்ததாக 2024 டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. ஆகஸ்ட் 3ஆம் தேதி ட்ரினிடாட் நகரில் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர்கள் இல்லாத நிலைமையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியை சிறப்பாக பந்து வீசி 10 ஓவரில் 149/6 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது.

அதிகபட்சமாக கேப்டன் ரோவ்மன் போவல் 48 (32) ரன்களும் நிக்கோலஸ் பூரான் 41 (34) ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 150 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு அறிமுக போட்டியில் அதிரடியாக விளையாடிய திலக் வர்மா 39 (22) ரன்களை எடுத்ததை தவிர்த்து இஷான் கிசான் 6, சுப்மன் கில் 3, சூரியகுமார் யாதவ் 21, கேப்டன் ஹர்திக் பாண்டியா 19, சஞ்சு சாம்சன் 12 என முக்கிய வீரர்கள் அனைவரும் ஆரம்ப முதலே சவாலான பிட்ச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர்.

- Advertisement -

200வது போட்டியில் பரிதாபம்:
அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் கடைசி நேரத்தில் அக்சர் படேல் 13 (11) ரன்களும் அர்ஷிதீப் சிங் 12 (7) ரன்கள் எடுத்தும் 20 ஓவர்களில் 145/9 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா போராடித் தோற்றது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்தி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் சந்தித்த தோல்விகளுக்கு இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்து 1 – 0* (5) என்ற கணக்கில் முன்னிலை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஓபேத் மெக்காய், ஜேசன் ஹோல்டர், ரொமாரியா செஃபார்டு தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

முன்னதாக இப்போட்டியை தன்னுடைய 200வது போட்டியாக விளையாடிய இந்தியா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 200 போட்டியில் விளையாடும் அணி என்ற பாகிஸ்தானின் உலக சாதனை சமன் செய்தது. இருப்பினும் அதில் பந்து வீச்சில் சிறப்பாகவே செயல்பட்ட இந்தியா பேட்டிங்கில் மோசமாக செயல்பட்டு 7 வருடங்கள் கழித்து முதல் முறையாக 150க்கும் குறைவான ரன்களை கூட சேசிங் செய்ய முடியாமல் தோல்வியை சந்தித்து தலை குனிந்துள்ளது.

- Advertisement -

அத்துடன் இந்த வருடம் ஜனவரியில் நடந்த இலங்கைக்கு எதிரான தொடரில் 207 ரன்களை வெற்றிகரமாக துரத்த தவறிய இந்தியா பிப்ரவரியில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற தொடரில் 177 ரன்களையும் சேசிங் செய்ய தவறியது. இருப்பினும் அத்தொடரில் மற்றொரு போட்டியில் வெறும் 100 ரன்களை எளிதாக துரத்திய இந்தியா நேற்று வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 150 ரன்களை சேசிங் செய்ய தவறியது. அதாவது இந்த வருடம் இதுவரை டி20 கிரிக்கெட்டில் 4 போட்டிகளில் சேசிங் செய்யும் நிலைமையை சந்தித்த இந்தியா அதில் 3 முறை தோல்வியை சந்தித்துள்ளது.

இப்படி ஒரு வருடத்தில் 4 தொடர்ச்சியான சேசிங்கில் 3 முறை இந்தியா தோல்வியை சந்திப்பது 2012க்குப்பின் இதுவே முதல் முறையாகும். இவை அனைத்தையும் விட 2006இல் தன்னுடைய வரலாற்றின் முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா 2014இல் விளையாடிய 50வது போட்டியில் 2018இல் விளையாடிய 100வது போட்டியிலும் 2021இல் களமிறங்கிய 150வது போட்டியில் தொடர்ந்து வெற்றிகளை சந்தித்து வந்தது.

இதையும் படிங்க:IND vs WI : தமிழக வீரர் நடராஜனுக்கு அடுத்து இந்திய அணியில் இரண்டாவது வீரராக முகேஷ் குமார் செய்த – தனித்துவமான சாதனை

ஆனால் நேற்று தான் முதல் முறையாக தன்னுடைய 200வது மைல்கல் போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்து பரிதாபத்திற்கு உள்ளாகியுள்ளது. இத்தனைக்கும் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியாவுக்காக நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2023 தொடரில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர்கள் களமிறங்கிய இந்த போட்டியில் வெறும் 150 ரன்களை துரத்த முடியாமல் தோல்வியை சந்தித்துள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. இருப்பினும் யானைக்கும் அடி சறுக்கும் என்பதால் அடுத்து வரும் போட்டிகளில் இந்தியா வென்று கோபையை வெல்லும் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement