சரியும் விராட் கோலியின் டெஸ்ட் சாம்ராஜ்யம்? ரோஹித் தலைமையில் 9 வருடத்துக்கு பின் இந்தியா 3 மோசமான சாதனை

Rohit Sharma and Virat Kohli
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதன் காரணமாக தென்னாபிரிக்க மண்ணில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரை வென்று மாபெரும் சரித்திரம் படைக்கும் வாய்ப்பை மீண்டும் இந்தியா தவற விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

முன்னதாக தோனி தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாடுகளில் திண்டாடி வந்த இந்தியாவுக்கு விராட் கோலி 2014ஆம் ஆண்டு புதிய கேப்டனாக பொறுப்பேற்றார். அப்போதிலிருந்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக வாய்ப்பும் ஆதரவும் கொடுத்த அவர் தம்முடைய ஆக்ரோஷமான கேப்டன்ஷிப் வாயிலாக 2016 – 2021 வரை தொடர்ந்து இந்தியாவை உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக ஜொலிக்க வைத்தார்.

- Advertisement -

சரிகிறதா சாம்ராஜ்யம்:
அதை விட சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் 2018/19இல் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரை வென்ற ஆசிய அணியாக இந்தியாவை சாதனை படைக்க வைத்த அவர் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் சில மகத்தான வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். இருப்பினும் சர்ச்சைக்குரிய முறையில் அவர் கேப்டன் பதவியிலிருந்து விலகிய பின் பொறுப்பேற்ற ரோஹித் சர்மா சொந்த மண்ணில் சில வெற்றிகளை பெற்றாலும் லண்டனில் நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவை வெற்றி பெற வைக்க முடியவில்லை.

1. இதெல்லாம் ஒருபுறமிருக்க 2023 பிப்ரவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் உஸ்மான் கவாஜா 180 ரன்கள், 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆஸ்திரேலியாவின் ட்ராவிஸ் ஹெட் 163, இத்தொடரில் டீன் எல்கர் 185 என இந்த வருடம் 3 வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் இந்தியாவுக்கு எதிராக 150க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ளனர். இப்படி ஒரே வருடத்தில் 3 வெளிநாட்டு வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக 150+ ரன்கள் அடிப்பது விராட் கோலி தலைமையில் ஒருமுறை கூட நடந்ததில்லை. கடைசியாக 9 வருடத்திற்கு முன் தோனி தலைமையில் 2014இல் தான் இப்படி 3 வெளிநாட்டு வீரர்கள் 150+ ரன்கள் அடித்திருந்தனர்.

- Advertisement -

2. அதே போல 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் முதல் இன்னிங்ஸில் 469 ரன்களை ஆஸ்திரேலியா குவித்த நிலையில் இப்போட்டியில் தென்னாபிரிக்கா முதல் இன்னிங்ஸில் 408 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்கா நியூசிலாந்து ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய வெளிநாடுகளில் விராட் கோலி தலைமையில் இப்படி ஒரு முறை கூட இந்தியா முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் எதிரணிக்கு கொடுத்ததில்லை.

3. இது மட்டுமல்லாமல் இந்த போட்டியின் வாயிலாக தென்னாப்பிரிக்க மண்ணில் இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய தோல்வியை பதிவு செய்தது. இதற்கு முன் 2010ஆம் ஆண்டு தோனி தலைமையில் இன்னிங்ஸ் மற்றும் 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே முந்தைய படுதோல்வியாகும். ஆனால் விராட் கோலி தலைமையில் 2018, 2021/22 ஆகிய வருடங்களில் தென்னாப்பிரிக்காவில் விளையாடிய போது இந்தியா இப்படி இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்ததில்லை.

இதையும் படிங்க: பிளான் பி இல்லையா? நமக்கும் அதே பிட்ச் தானே.. ரோஹித் கேப்டன்ஷிப் – இந்திய பவுலர்கள் மீது ஜஹீர் கான் அதிருப்தி

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது விராட் கோலி உருவாக்கிய இந்திய டெஸ்ட் சாம்ராஜ்யம் சரிவதாக தோன்றுகிறது. ஏனெனில் பவுலர்கள் சோர்வாக செயல்படும் போது விராட் கோலி கொடுக்கக்கூடிய ஆக்ரோஷமும் உத்வேகமும் ரோகித்திடம் தென்படவில்லை. மொத்தத்தில் மார்க்கோ யான்சன் போன்ற பேட்ஸ்மேன் 84* ரன்கள் அடிக்கும் அளவுக்கு ரோகித் தலைமையிலான இந்திய அணியில் ஃபயர் எனப்படும் வெற்றிக்காக போராடும் நெருப்பு குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement