INDIA : இந்தியா ஆரஞ்சு நிற ஆடை அணிந்து விளையாட உள்ள போட்டி இதுதான் – விவரம் இதோ

உலக கோப்பை தொடர் போட்டிகள் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் தங்களது துவக்க ஆட்டத்தில் விளையாடி விட்ட நிலையில் இந்தியா நாளை தனது முதல் ஆட்டத்தில்

india
- Advertisement -

உலக கோப்பை தொடர் போட்டிகள் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் தங்களது துவக்க ஆட்டத்தில் விளையாடி விட்ட நிலையில் இந்தியா நாளை தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியுடன் விளையாட உள்ளது. தென்ஆப்பிரிக்கா அணி கடந்த இரு போட்டிகளிலும் தோல்வி அடைந்ததால் இந்தியாவுக்கு எதிரான இந்த போட்டியில் வென்று வெற்றி பாதைக்கு திரும்ப முயற்சி செய்யும்.

india

- Advertisement -

அதே போன்று தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று தன்னம்பிக்கையுடன் தொடரை ஆரம்பிக்க இந்திய அணி முயற்சி செய்யும். சவுதாம்ப்டனில் நாளை நடைபெற உள்ள இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும் டு பிளிசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணி இந்த தொடரில் நீல நிற உடையில் போட்டிகளில் பங்கேற்றாலும் ஒரு சில போட்டிகளில் ஆரஞ்சு நிற உடையில் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. அதன் காரணம் யாதெனில் இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற அணிகள் நீல நிற உடை அணிந்து விளையாடுகிறது. இதனால் ஒரு மாற்றத்திற்காக இந்திய அணி ஆரஞ்சு நிற உடையிலும் விளையாட இருக்கிறது. போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி தொடர் முழுவதும் நீல நிற உடையிலேயே விளையாடும்.

india

ஆனால் மற்ற அணிகள் அவர்களது விருப்பத்திற்கு ஏற்றார் போல் மாற்றி மாற்றி ஜெர்ஸியை அணிந்து விளையாடலாம் என்று ஐசிசி அறிவித்தது. இதனை தொடர்ந்து இந்திய அணி ஆரஞ்சு நிற உடையில் பங்கேற்கும் போட்டிகள் குறித்து இந்திய அணி நிர்வாகம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இந்திய அணி வரும் 22ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மற்றும் 30 ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் ஆரஞ்சு நிற உடையில் விளையாடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement