ஐசிசி 2026 டி20 உ.கோ இந்திய அணி அறிவிப்பு: கில்லுக்கு டாட்டா, இஷான் கம்பேக் 2 தமிழக வீரர்கள்.. லிஸ்ட் இதோ

Team India 2026 T20WC
- Advertisement -

ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் மார்ச் 8ஆம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. அத்தொடரில் நடப்புச் சாம்பியனாக சொந்த மண்ணில் களமிறங்கும் இந்தியா தங்களது அணியை வெளியிட்டுள்ளது. அந்த அணியில் துணைக் கேப்டன் சுப்மன் கில் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதை பலரும் வரவேற்கிறார்கள்.

ஏனெனில் 2023இல் அறிமுகமாகி தடுமாற்றமாக விளையாடிய அவரை கழற்றி விட்ட இந்திய அணி அபிஷேக் சர்மா – சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு வாய்ப்பளித்தது. அந்த வாய்ப்பில் அபிஷேக் சர்மா உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். மறுபுறம் ஓப்பனிங்கில் 3 சதங்களை அடித்த சஞ்சு சாம்சன் ஒரு வழியாக இந்திய அணியில் நிலையான இடத்தைப் பிடித்தார்.

- Advertisement -

சுப்மன் கில்லுக்கு டாட்டா:

இருப்பினும் திடீரென சுப்மன் கில்லை ஆல் ஃபார்மட் கேப்டனாக வளர்க்க நினைக்கும் தேர்வுக்குழு டி20 அணியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுத்து ஓப்பனிங்கில் வாய்ப்பளித்தது. அந்த வாய்ப்பில் தடுமாற்றமாக விளையாடிய கில் கடைசியாக விளையாடிய 18 சர்வதேச டி20 போட்டிகளில் அரை சதம் கூட அடிக்கவில்லை. அதனால் கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் நேற்று காயமடைந்த அவருக்கு பதிலாக விளையாடிய சாம்சன் 168 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி அதிக தாக்கத்தை ஏற்படுத்தினார்.

அதனால் அவரை கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு சாம்சனை தேர்ந்தெடுத்துள்ளது. அதே போல ஜிதேஷ் சர்மாவும் கழற்றி விடப்பட்டு 2025 சயீத் முஸ்டாக் அலி கோப்பை ஃபைனலில் சதமடித்து கேப்டனாக ஜார்க்கண்ட் வெற்றி பெற வைத்த இஷான் கிசான் பேக்-அப் கீப்பராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். அதே சமயம் ஹர்ஷித் ராணா விமர்சனங்களை தாண்டி மீண்டும் தேர்வாகியுள்ளார்.

- Advertisement -

இந்திய அணி அறிவிப்பு:

சுப்மன் கில்லுக்கு பதிலாக அக்சர் பட்டேல் துணைக் கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளார். மற்ற படி சூரியகுமார் யாதவ் தலைமையில் அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரித் பும்ரா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், தமிழக வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அதனால் வரவேற்பைப் பெற்றுள்ள 2026 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி இதோ:

இதையும் படிங்க: உண்மையாவே இந்தியா தான் உலகின் நம்பர் ஒன்.. அவங்கள ஜெய்க்க இதை செஞ்சாகனும்.. தெ.ஆ கோச் பாராட்டு

சூரியகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (கீப்பர்), இஷான் கிசான் (கீப்பர்), திலக் வர்மா, ஹர்டிக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் பட்டேல் (துணைக் கேப்டன்), ரிங்கு சிங், ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ்

Advertisement