அடித்தது ஜாக்பாட்.. ரசிகர்கள் கேட்ச் பிடித்தல் என்ன பரிசு தெரியுமா…? ஐபில் அதிரடி அறிவிப்பு

kohli
- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளன.முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதவுள்ளன.

Dhoni

- Advertisement -

இரண்டு வருட தடைக்கு பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இந்தவருடம் மீண்டும் ஐபிஎல்-இல் விளையாடவுள்ளது. ஐபிஎல்-ஐ பொறுத்தவரையில் ஆட்டத்தின் ஒவ்வொரு விக்கெட் முதல்,பவுண்டரி மற்றும் சிக்ஸருக்கு வீரர்களுக்கு பரிசுமழை கொட்டும்.இந்த வருடம் வீரர்களுக்கு மட்டுமில்லாமல் ஆட்டத்தை காணவரும் ரசிகர்களுக்குமே பரிசுமழை கொட்டவுள்ளது.

tata

ஆம்,இந்தவருடம் டாடா மோட்டார்ஸ் ஐபிஎல்-இல் வீரர்கள் தூக்கியடிக்கும் பந்தை ஆடியன்ஸ் சைடில் வரும்போது யார் அந்த சிக்ஸரை சூப்பராக கேட்ச் பிடிக்கின்றாரோ அவருக்கு கார் ஒன்றை பரிசாக வழங்க முடிவுசெய்துள்ளது.இதுதொடர்பாக டாடா மோட்டார்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.எனவே இந்தமுறை வீரர்களுக்கு மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் பரிசுமழை கொட்டோ கொட்டென்று கொட்டப்போகின்றது.

Advertisement