ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இந்தியாவை பூர்வீகமாக கொண்டுள்ள 19 வயது வீரர் இடம் பெற்றிருக்கிறார். இதனை அறிந்த இந்தியர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்தியாவுடன் மிகப்பெரிய சுற்றுப் பயணத் தொடரை முடித்திருக்கும் ஆஸ்திரேலிய அணி அடுத்ததாக நியூசிலாந்து அணியுடன் மிகப்பெரிய தொடரில் விளையாட போகிறது. வருகின்ற பிப்ரவரி மாதம் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே டி20 தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணியை தற்போது அறிவித்திருக்கின்றனர்.
இந்த ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் பின்ச், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஸ், அகார், மார்கஸ் ஸ்டோயின்ஸ், மேதியூ வேட், ஆடம் ஜம்பா போன்ற முக்கிய வீரர்கள் இடம்பெற்று இருக்கின்றனர். இந்த அணியில் இந்தியாவை பூர்வமாக கொண்டிருக்கும் பஞ்சாப் விவசாயி மகன் தன்வீர் சங்காவும் இடம்பெறு இருக்கிறார்.
பஞ்சாப்பை சேர்ந்த ஜோகா சிங் சங்காவின் 19 வயது மகன் தன்வீர் சங்கா இடம் பெற்றிருக்கிறார்.
தன்வீர் சங்கா சிறந்த லெக் ஸ்பின்னர் ஆவார். இவரது தந்தை ஜேகா சிங் சங்கா 1997ல் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா சிட்னிக்கு புலம் பெயர்ந்துள்ளார். பஞ்சாபில் விவசாயம் செய்து வந்த இவரது தந்தை தற்போது ஆஸ்திரேலியாவில் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
இவரது அம்மா உப்நீத் கணக்கராக பணியாற்றி வருகிறார். இந்திய வம்சாவளியை சேர்ந்த தன்வீர் ஆஸ்திரேலிய சர்வதேச அணியில் இடம்பெற்று இருப்பது பெருமையாக இருக்கிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியா சர்வதேச அணியில் இடம்பெற்றது குறித்து தன்வீர் சங்கா பேசியிருக்கிறார். அவர் கூறுகையில் “ஆஸ்திரேலியா சர்வதேச அணியில் நான் இடம்பெற்று இருக்கும் செய்தியை கேட்டவுடன் நிலவை தொட்டு விட்டதாக கருத்தினேன்.
இந்த செய்தி நிஜம் என்ற நான் நம்பவே இல்லை. ஆனால் 19 வயதில் சர்வதேச அணியில் விளையாடுவதெல்லாம் ஒரு வரம்” என்று கூறியிருக்கிறார் தன்வீர். தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பாஷ் டி20 லீக்கில் அவர் தனது சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தியதன் காரணமாக ஆஸ்திரேலிய தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்து தேசிய அணியில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.