இந்தியாவில் நடப்பது ஐபிஎல் இல்ல ஃபிக்ஸிங் லீக்.. இந்த ஆதாரம் போதாதா? முன்னாள் பாக் வீரர் பதிவு

Tanveer Ahmed
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கடந்த மார்ச் 22 முதல் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. உலகின் நம்பர் ஒன் பிரீமியர் லீக் டி20 தொடரான இந்தத் தொடரில் 10 அணிகள் கோப்பையை வெல்ல பலப்பரிட்சை நடத்தி வருகின்றன. அதில் பெரும்பாலான போட்டிகள் விறுவிறுப்பாக அமைந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. டெல்லி – ராஜஸ்தான் போட்டி சூப்பர் ஓவர் வரை சென்று ரசிகர்களுக்கு விருந்தளித்தது.

அந்த சூழ்நிலையில் ராஜஸ்தான் அணி லக்னோவுக்கு எதிராக கடைசி ஓவரில் வெறும் 9 ரன்கள் அடிக்க முடியாமல் தோற்றது. அந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி மேட்ச் பிக்ஸிங் செய்து வேண்டுமென்றே தோற்றதாக ராஜஸ்தான் வாரியத்தின் நிர்வாகி ஜய்தீப் பிஹாணி விமர்சித்தார். எனவே அது பற்றி விசாரணை தேவைப்படுவதாகவும் அவர் விமர்சனம் செய்தார்.

- Advertisement -

ஐபிஎல் பிக்ஸிங்:

இருப்பினும் ஒரு பந்தில் வெற்றி மாறக்கூடிய ஐபிஎல் தொடரில் அது சாதாரண தோல்வி என்று ராஜஸ்தான் அணி நிர்வாகம் பதில் கொடுத்தது. எனவே அந்த அடிப்படை ஆதாரமற்ற விமர்சனம் போல தாங்கள் மேட்ச் பிக்ஸிங் எதுவும் செய்யவில்லை என்றும் ராஜஸ்தான் நிர்வாகம் தெளிவுப்படுத்தியது. அதே போல ஐபிஎல் தொடரில் இப்போதெல்லாம் பிக்சிங் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் ஐபிஎல் நிர்வாகம் தெளிவுப்படுத்தியது.

இந்நிலையில் இந்தியாவில் நடப்பது ஐபிஎல் அல்ல பிக்ஸிங் லீக் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் டன்வீர் அஹ்மத் பகிரங்கமாக பதிவிட்டுள்ளார். ராஜஸ்தான் அணி பிக்சிங் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு அதற்கு போதுமான ஆதாரமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

ரசிகர்கள் பதிலடி:

“எங்களுடைய ஐபிஎல் உலகிலேயே மிகவும் பெரிய லீக் தொடர் என்று பிசிசிஐ சொல்கிறது. ஆம் அது பெரியது தான். ஆனால் அந்தத் தொடரில் மிகப்பெரிய ஃபிக்ஸிங் நடந்து கொண்டிருக்கிறது. அந்தத் தொடரில் விளையாடும் பெரும்பாலான அணிகள் ஃபிக்சர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 24/4 டூ 143/8.. சிஎஸ்கே’வை முந்திய ஹைதராபாத் மோசமான சாதனை.. பும்ரா அபார சாதனை.. மும்பை எளிதான வெற்றியா?

அதைப் பார்க்கும் இந்திய ரசிகர்கள் 90களிலேயே விதவிதமாக ஃபிக்ஸிங் செய்து நாட்டுக்காக விளையாடிய பாகிஸ்தானை சேர்ந்த நீங்கள் ஐபிஎல் பற்றி பேசக்கூடாது என்று பதிலடி கொடுக்கின்றனர். மேலும் ஐபிஎல் தொடரில் உரிமையாளர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கே 2016, 2017 சீசன்களில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் அதிரடியாக தடை செய்யப்பட்டது. அந்த வகையில் பிசிசிஐ பிக்ஸிங்கை எப்போதும் அனுமதிப்பதில்லை என்றும் ரசிகர்கள் பதிலடி கொடுப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement