30 நொடிகள் முன்சென்றிருந்தால் எங்களது உயிர் போயிருக்கும் – வங்கதேச வீரர் தமீம் இக்பால் பேட்டி

Tamim
- Advertisement -

வங்கதேச அணி கடைசியாக நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வந்தது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று நடைபெற இருந்த நிலையில் நேற்று முன் தினம் நடந்த துப்பாக்கி சூட்டினால் நேற்றைய டெஸ்ட் போட்டி ஐசிசி ரத்து செய்தது.

Terror

- Advertisement -

எனவே வங்கதேச அணி வீரர்கள் தற்போது பத்திரமாக தாயகம் திரும்பியுள்ளனர். நாடு திரும்பிய பின் வங்கதேச அணியின் துவக்க ஆட்டக்காரரான தமிம் இக்பால் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: நாங்கள் பயிற்சியை முடித்து விட்டு நானும் முகமதுல்லா மற்றும் முஸ்தபிசுர் ரஹீம் ஆகியோர் தொழுகைக்குச் செல்ல மசூதிக்கு பேருந்தின் மூலம் சென்று கொண்டிருந்தோம்.

அப்போது திடீரென மசூதியின் உள்ளேயும் வெளியேயும்மக்கள் ஆங்காங்கே கீழே விழுந்தனர். அப்போதுதான் எங்களுக்கு தெரிய வந்தது மசூதியினுள் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற விடயம் நாங்கள் ஒருவேளை முப்பது செகண்ட் முன்னாள் மசூதிக்குள் சென்றிருந்தால் நாங்களும் இன்று உயிரோடு இருக்குமா என்று தெரியவில்லை.

nz

அந்த அளவிற்கு இந்த சம்பவம் எங்களை பாதித்துவிட்டது. இந்த அதிர்ச்சியில் இருந்து நாங்கள் மீண்டு வர எங்களுக்கு சில நாட்கள் தேவைப்படும் என்று நினைக்கிறேன் என்று தமிம் இக்பால் கூறினார்.

Advertisement