இந்திய அணியின் வீரர்களான இவர்கள் மூவருமே என் ஹீரோக்கள் – தமீம் இக்பால் நெகிழ்ச்சி

Tamim
- Advertisement -

கடந்த 2007ஆம் ஆண்டு ஐசிசி நடத்திய சர்வதேச 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்றது. இந்த தொடருக்கான இந்திய அணியில் ராகுல் டிராவிட் கேப்டனாக நியமிக்கப்பட்டு அந்தத்தொடரில் இந்திய அணி களமிறங்கியது. மிகவும் மோசமாக விளையாடிய இந்திய அணி இத்தொடரில் காலிறுதிக்கு கூட தகுதி பெறாமல் லீக் போட்டியிலேயே தோல்வி அடைந்து வெளியேறியது.

ind 2007

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணிக்கு எதிராக அப்போது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஏனெனில் அந்தத் தொடரின் லீக் ஆட்டத்தில் பலவீனமான வங்கதேச அணியிடம் தோற்று அவமானப்பட்டு இந்திய அணி வெளியேறியது. இதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் வீட்டிலும் ரசிகர்கள் கல்வீச்சு நடத்தினர். மேலும் அந்த தொடரில் இடம் பெற்று இருந்த அனைத்து இந்திய வீரர்களுக்கு எதிராக வலுவான எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில் தற்போது இந்திய அணி தோற்ற அந்த போட்டியில் சிறப்பாக விளையாடி அரை சதம் விளாசிய தமிம் இக்பால் அந்தப் போட்டி குறித்தும், இந்திய அணி வீரர்கள் குறித்தும் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பை நினைவலைகளை தமிம் இக்பால் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பகிர்ந்துகொண்டார். அதில் அவர் கூறியதாவது :

Tamim

நான் இந்தியாவிற்கு எதிராக 2007 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் விளையாடும் போது சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் மற்றும் சௌரவ் கங்குலி ஆகியோரை நேரில் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். மேலும் அவர்களை பார்ப்பேனா என்று நினைத்த வேளையில் அவர்கள் உடன் விளையாடும் பொழுது எனக்கு அவ்வளவு உற்சாகமாக இருந்தது. நான் அவர்கள் மூவரையும் பார்த்துக்கொண்டே இருந்தேன்.

- Advertisement -

என்னுடைய முன்னிலையில் அவர்கள் விளையாடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் என்றார். மேலும் தொடர்ந்து பேசிய தமிம் இக்பால் 2007 உலகக் கோப்பை இந்திய அணிக்கு எதிரான வெற்றி எங்கள் அணிக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய வெற்றியாகும். நாங்கள் நினைத்துப் பார்க்க முடியாத வெற்றியாக அந்த போட்டி அமைந்தது. அந்த வெற்றியின் மூலம் நாங்கள் கிரிக்கெட்டில் ஏதாவது செய்ய முடியும் என்ற நம்பிக்கையே எங்களுக்குள் வந்தது.

dravid

மேலும் இந்திய அணி வீரர்கள் முதலில் பேட்டிங் செய்து 190 ரன்களை மட்டுமே எடுத்தனர். அதன்காரணமாக எங்களுக்கான வெற்றி வாய்ப்பு அதிலிருந்து நாங்கள் உறுதி செய்து கொண்டோம் என்றார். அந்தப் போட்டியில் நான் பேட்டிங் செய்ய சென்றபோது ஜாஹீர் கானை எதிர்கொண்டேன். 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசினார். என்னால் அந்த அளவு வேகத்தினை எதிர்கொள்ள முடியும் என்று நான் நினைத்தேன்.

அவர் வீசிய முதல் பந்தை தடுத்து ஆடினேன். பிறகு அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினேன் அதிலிருந்து எனக்கு கொஞ்சம் நம்பிக்கை கிடைத்தது. நான் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து எங்கள் அணியும் வெற்றி பெற்றது என்று தெரிவித்துள்ளார். மேலும் தான் ஹீரோவாக பார்த்து ரசித்த, மதித்த சச்சின், கங்குலி, டிராவிட் ஆகியோரை எதிர்த்து நான் விளையாடியது என் வாழ்க்கையிலேயே மிகச்சிறந்த தருணமாக கருதுகிறேன் என்று தமிம் இக்பால் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement