
ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7ஆம் தேதி இந்தியாவில் துவங்க உள்ளது. அத்தொடரில் தங்களது போட்டிகளை இந்தியாவுக்கு வந்து விளையாட மாட்டோம் என்று வங்கதேசம் அறிவித்துள்ளது. சமீபத்தில் வங்கதேசத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் சில இந்து மக்கள் இயற்கை எழுதியதாக செய்திகள் வெளிவந்தன. அதற்கு இந்தியாவை சிறந்த முக்கிய ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அத்துடன் வங்கதேச வீரர் முஸ்தபிசூர் ரகுமான் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாடக்கூடாது என்ற எதிர்ப்புகளும் எழுந்தன. எனவே முன்னெச்சரிக்கையாக 9.20 கோடிக்கு வாங்கப்பட்ட ரஹ்மானை பிசிசிஐ அறிவுறுத்தலின் பேரில் கொல்கத்தா அணி விடுவித்தது. அதற்கு பதிலடியாக இந்தியாவுக்கு வந்து விளையாட மாட்டோம் என்று அறிவித்துள்ள வங்கதேசம் தங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பவும் தடை விதித்துள்ளது.
அத்துடன் தங்களது போட்டிகளை இலங்கையில் நடத்த அனுமதிக்குமாறு ஐசிசி அமைப்புக்கு வங்கதேசம் கோரிக்கை வைத்தது. ஆனால் அதில் சிக்கல் இருப்பதால் ஒன்று இந்தியாவில் விளையாடுங்கள் அல்லது புள்ளியை இழக்கத் தயாராகுங்கள் என்று ஐசிசி வங்கதேசத்துக்கு பதிலளித்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் பொருளாதாரம் மற்றும் தரத்தில் சிறந்த இந்தியாவுடன் மோதாமல் வங்கதேசம் தங்களுடைய தகுதியறிந்து முடிவெடுக்க வேண்டுமென்று அந்நாட்டின் முன்னாள் கேப்டன் தமீம் இக்பால் எச்சரித்துள்ளார்.
இல்லையெனில் வங்கதேச அணி 10 வருடங்கள் பின்னோக்கி செல்ல வேண்டிய நிலை வரலாம் என்று எச்சரிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “தற்போதைய பரபரப்பான சூழ்நிலையில் திடீரென கருத்து சொல்வது கடினம். ஆனால் அனைவரும் ஒன்றாக வரும் போது பல்வேறு விஷயங்களை பேச்சுவார்த்தையின் வாயிலாக தீர்க்க முடியும் என்பதை மனதில் வைக்க வேண்டும்”
“உலக கிரிக்கெட்டில் வங்கதேசம் எங்கே நிற்கிறது? வங்கதேச கிரிக்கெட்டின் வருங்காலம் என்ன? என்பதைக் கருத்தில் கொண்டு நீங்கள் அதற்கு தகுந்தார் போல் முடிவுகளை எடுக்க வேண்டும். ஏனெனில் இன்று எடுக்கும் முடிவு அடுத்த 10 வருட காலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். அதனால் வங்கதேச கிரிக்கெட்டுக்கும் வீரர்களுக்கும் எது நல்லது என்பதை உணர்ந்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்”
இதையும் படிங்க: 3 வகையான இந்திய அணியிலும் விளையாடணும்னா இதை மட்டும் பண்ணுங்க.. ஜெய்ஸ்வாலுக்கு – ஆகாஷ் சோப்ரா அட்வைஸ்
“வங்கதேச வாரியத்தை நாம் சுதந்திரமான அமைப்பாக கருத வேண்டும். அதில் அரசு முக்கிய காரணியாக இருந்தாலும் நமது நிர்வாகிகள் சுதந்திரமாக சொந்த முடிவுகளை எடுக்க வேண்டும். அதே போல உணர்வுகளை வைத்தும் மக்கள் சொல்வதை வைத்தும் முடிவுகளை எடுக்கக்கூடாது. அப்படி எடுக்கத் துவங்கினால் உங்களால் பெரிய அமைப்பை வெற்றிகரமாக நடத்த முடியாது” என்று கூறினார்