3 வகையான இந்திய அணியிலும் விளையாடணும்னா இதை மட்டும் பண்ணுங்க.. ஜெய்ஸ்வாலுக்கு – ஆகாஷ் சோப்ரா அட்வைஸ்

Aakash Chopra
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி துவக்க ஆட்டக்காரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை முதன்மை துவக்க வீரராக நிலையான இடத்தினை பிடித்து விட்டார். ஆனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நிரந்தர இடம் இல்லாமல் இருந்து வருகிறார். இருப்பினும் மிகத் திறமை வாய்ந்த வீரராக பார்க்கப்படும் அவருக்கு வருங்காலத்தில் மூன்று விதமான இந்திய அணியிலும் இடம் வழங்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

ஜெய்ஸ்வால் நீங்க இதை செய்தால் போதும் : ஆகாஷ் சோப்ரா

இடையிடையே அவருக்கு கிடைக்கும் சில வாய்ப்புகளில் ஒருநாள் போட்டிகளிலும் ஜெய்ஸ்வால் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக சமீபத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் விளையாடியிருந்த அவர் மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது சதம் அடித்து அசத்தியிருந்தார்.

- Advertisement -

அதன் காரணமாக தற்போது எதிர்வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் மாற்று துவக்க வீரராக இடம் பிடித்திருக்கிறார். அதோடு தொடர்ந்து இந்திய ஒருநாள் அணியில் தொடர்ந்து நீடிப்பார் என்றும் தெரிகிறது.

இந்நிலையில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் அணியை தாண்டி டி20 மற்றும் ஒருநாள் என மூன்று வகையான இந்திய அணியிலும் நிரந்தர இடம் பிடிக்க வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து அவருக்கு சில அறிவுரைகளை ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : ஜெய்ஸ்வால் உங்களுக்கு நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன்.

- Advertisement -

வருகிற 2026 ஐபிஎல் தொடரில் நீங்கள் 700 ரன்கள் வரை எடுக்க வேண்டும். ஏனெனில் 400 முதல் 450 ரன்கள் எடுத்தால் அது நிச்சயம் உங்களுக்கு போதாது. எனவே இனிவரும் ஒவ்வொரு சீசன்களிலும் பெரிய அளவில் ரன்களை குவிக்க வேண்டும். இந்த சீசனில் நீங்கள் 700 ரன்கள் அடித்தால் நிச்சயம் இந்திய அணியின் கதவை உடைத்துக் கொண்டு முன்னேற முடியும்.

இதையும் படிங்க : டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – ரஹானே கணிப்பு

உங்களிடம் இருக்கும் திறமைக்கு நிச்சயம் மூன்று வடிவத்திலும் விளையாடும் தகுதி உங்களிடம் உள்ளது என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது எதிர்வரும் ஜனவரி 11-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெறயிருக்கிறது.

Advertisement