தமிழக வீரர்களுக்கு வாய்பளிக்காதது ஏன் ? சி.எஸ்.கே அணி மீது எழுந்த சர்ச்சை – விவரம் இதோ

CSK-1
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீது கடந்த 12 வருட காலத்தில் இல்லாத அளவு தற்போது மிகப் பெரும் விமர்சனம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. மற்ற அணிகள் எல்லாம் இளம் வீரர்களை களமிறக்கி அவரது திறமையையும் பயன்படுத்தி அவர்களை வளர்த்துவிட்ட பெருமையை கொண்டிருக்கின்றனர். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தற்போது வரை ஒரு இளம் வீரர் கூட உருவாக்கி இந்திய அணிக்காக வளர்த்து விட்டவில்லை.

CSK

ஐபிஎல் தொடர் என்பது இளம் வீரர்களுக்கான ஒரு பாதையாக உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு லீக் தொடராகும். ஆனால் சென்னை அணி அதனை செய்யவே இல்லை. மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகளில் இருந்தும், கொல்கத்தா, ராஜஸ்தான், பெங்களூரு போன்ற அணிகளில் இருந்தும் பல இளம் வீரர்கள் இந்திய அணிக்காக தேர்வாகி இருக்கிறார்கள். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இதனை ஒரு வருடம் கூட செய்ததில்லை.

- Advertisement -

பாபா அபாரஜீத், அனிருதா ஸ்ரீகாந்த் போன்ற பல வீரர்கள் அந்த அணிக்கு இளம் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டு ஒரு சில போட்டிகளில் கூட வாய்ப்பு அளிக்கப்படாமல் இருந்துள்ளனர். தற்போது தமிழக சுழற்பந்துவீச்சாளர் சாய் கிஷோர் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என் ஜெகதீசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Kishore-2

ஆனால் அவர்களை தற்போது வரை ஒரு போட்டியில் கூட தோனி களமிறக்கவில்லை. இந்த விமர்சனம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இருவருமே தங்களது திறமைகளில் பெரிதாக சாதித்தவர்கள். அப்படி இருந்தும் அவர்களை ஒரு போட்டியில் கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் களம் இறக்காதது, பெரும் கவலையை அளித்துள்ளது.

Jagadeesan

இத்தனைக்கும் கேதர் ஜாதவ் போன்ற வீரர்கள் கடந்த இரண்டு வருடங்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இவர்களுக்கு வாய்ப்பு தற்போது வரை மறுக்கப்பட்டு வருவது தமிழக ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement