சையத் முஷ்டாக் அலி தொடரில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த தமிழக வீரர் – ஐ.பி.எல் தொடரில் விளையாடுவது உறுதி

Tamilnadu
- Advertisement -

தற்போது நடைபெற்று முடிந்த சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் தமிழக அணி வெற்றி பெற்று இருக்கிறது. தினேஷ் கார்த்திக் தலைமையில் செயல்பட்ட தமிழக அணி அனைத்து போட்டிகளிலும் அதிரடியாக விளையாடி வெற்றி பெற்று தற்போது இறுதி போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கிறது. பரோடா அணிக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போட்டியில் தமிழக அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. தினேஷ் கார்த்திக் தலைமையில் தமிழக அணி தனது 2-வது வெற்றியை பதிவு செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது தமிழக அணியில் ஷாருக்கான் என்ற வீரர் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார். இவரது அதிரடி ஆட்டத்தால் தமிழக அணி பலமுறை வெற்றியை கண்டு இருக்கிறது. ஷாருக்கான் தனது அணிக்காக அதிரடியாக விளையாடினாலும் கடைசி வரை நின்று அணிக்கு வெற்றியை பெற்றுத் தருகிறார். இதுவே அவரது ஸ்டைலாக இருக்கிறது அதுதான் அவரை தற்போது வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.

ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டி ஒன்றில் தமிழக அணி 13 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து வெறும் 66 ரன்கள் மட்டும் குவித்து இருந்தது. அப்போது தமிழக அணி தோல்வி அடைந்து விடும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த போட்டியில் தமிழக அணி 18வது ஓவரிலயே வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றிக்கு ஷாருக்கான் தான் முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.

sharukh

ஷாருக்கான் இந்த போட்டியில் தொடக்கத்திலிருந்தே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 19 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார். இதில் ஷாருக்கான் 5 பவுண்டரிகளையும் 2 சிக்சர்களையும் விளாசினார். குறிப்பாக எந்த இடத்தில் இறங்கினாலும் விக்கெட்டை எளிதில் விட்டுக்கொடுக்காமல் அவர் சிறப்பான அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறார்.

sharukh 1

இதனால் இந்த சையது முஷ்டாக் அலி தொடரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஷாருக்கான் அடுத்ததாக ஐபிஎல் தொடரில் இடம் பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் விளையாடி வரும் இவர் ஐபிஎல் தொடரில் இடம் பெற ஐபிஎல் தொடரில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை ஆனால் இந்த முறை இவர் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கின்றனர்.

Advertisement