காலை 9 மணிக்கே வெற்றியை விட்டுட்டோம்.. தோல்விக்கு சாய் கிசோர் தான் காரணம்.. தமிழ்நாடு கோச் விமர்சனம்

Sulakshan Kulkarni
- Advertisement -

ரஞ்சிக் கோப்பை 2024 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் செமி ஃபைனலில் தமிழ்நாடு அணியை இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த மும்பை வரலாற்றில் 48வது முறையாக ஃபைனலுக்கு தகுதி பெற்றது. முன்னதாக இந்த தொடரில் இளம் வீரர் சாய் கிஷோர் தலைமையில் லீக் மற்றும் காலிறுதியில் வெற்றி கண்ட தமிழ்நாடு 7 வருடங்கள் கழித்து முதல் முறையாக செமி ஃபைனலுக்கு வந்தது. அதனால் இம்முறை கண்டிப்பாக வெல்வோம் என்று ஆவலுடன் தமிழக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் மும்பைக்கு எதிரான செமி ஃபைனலில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய மும்பை ரகானே, ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து 106/7 என சரிந்தது. ஆனால் அப்போது அபாரமாக விளையாடிய சர்துல் தாகூர் சதமடித்து 106 ரன்கள் குவித்து வெற்றியை பறித்தார். ஏனெனில் அவருடைய அசத்தலான ஆட்டத்தால் தப்பிய மும்பை 359 ரன்கள் அடித்து பின்னர் தமிழகத்தை இரண்டாவது இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி வெற்றி கண்டது.

- Advertisement -

அதனால் 36 வருடத்திற்கு பின் ரஞ்சிக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற தமிழக ரசிகர்களின் கனவு மீண்டும் கனவாக போனது. மேலும் செமி ஃபைனலில் 6 விக்கெட்டுகள் எடுத்து இந்த தொடரில் மொத்தம் 53 விக்கெட்கள் சாய்த்த சாய் கிஷோர் முழுமூச்சுடன் போராடியும் தமிழகத்திற்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியவில்லை. இந்நிலையில் இப்போட்டியில டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சாய் கிஷோரின் முடிவு தான் தோல்வியை கொடுத்ததாக தமிழக அணியின் பயிற்சியாளர் குலத்தன் குல்கரனி பரபரப்பான விமர்சனத்தை வைத்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பிட்ச்சை நான் பார்த்ததும் எங்களுக்கு என்ன கிடைக்கும் என்பது எனக்கு நன்றாக தெரிந்தது. காலிறுதியில் அவர்கள் வித்தியாசமான பிட்ச்சில் விளையாடினார்கள். அதைப் பார்த்த நான் இந்த அரையிறுதி பிட்ச் வேகத்துக்கு சாதகமாக மிகவும் கடினமாக இருக்கும் என்பதை உணர்ந்து கொண்டேன். அதனால் போட்டியை நாங்கள் வெல்வதற்கு சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும்”

- Advertisement -

“எப்போதும் நான் நேரடியாக பேசி விடுவேன். இந்த போட்டியின் முதல் நாளில் 9:00 மணிக்கே நாங்கள் தோற்று விட்டோம். டாஸ் வென்ற எங்களுக்கு அனைத்தும் கிடைத்தது. நான் மும்பையை சேர்ந்த நபர் என்பதால் இங்குள்ள சூழ்நிலைகள் எனக்கு நன்றாக தெரியும். இங்கே நாங்கள் முதலில் வந்து வீசியிருக்க வேண்டும். ஆனால் எங்களுடைய கேப்டன் வேறு உள்ளுணர்வைக் கொண்டிருந்தார். அவர் தான் எங்கள் அணியின் பாஸ். பிட்ச், எதிரணியின் மனநிலை என்ன என்பதை பற்றிய உள்ளீடுகளை என்னால் வழங்க முடியும்”

இதையும் படிங்க: 198 ரன்ஸ்.. கண்ணாடியை நொறுக்கிய எலிஸ் பெரி.. மந்தனா அதிரடியில் ஆர்சிபி கம்பேக் கொடுத்தது எப்படி?

“இப்போட்டியில் முதலில் பந்து வீசுவதற்காக நாங்கள் மனதளவில் தயாராக இருந்தோம். ஆனால் தொலைக்காட்சியில் கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது எங்களுடைய பேட்ஸ்மேன்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் காலிறுதியில் 3வது விளையாடிய அவர் 65 ரன்கள் அடித்து வெற்றியில் பங்காற்றினார். அந்த வகையில் இப்போட்டியில் அவர் வித்தியாசமான உள்ளுணர்வை கொண்டு டாஸ் முடிவை எடுத்தார். எனவே கேப்டனை நான் குற்றம் சொல்ல மாட்டேன். கடந்த 7 – 8 வருடங்களில் வேறு வீரர்கள் தலைமையில் செமி ஃபைனல் வராத தமிழ்நாடு அணி அவரது தலைமையில் இங்கே வந்ததை நேர்மறையாக பார்க்கிறேன்” என்று கூறினார்.

Advertisement