MS Dhoni : தோனி இதை மட்டுமே என்னிடம் கூறுவார். அதனால் நான் சிறப்பாக செயல்படுகிறேன் – தாஹிர் விளக்கம்

ஐ.பி.எல் தொடரின் 29 ஆவது போட்டி இன்று மதியம் 4 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், தினேஷ்

Tahir-2
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 29 ஆவது போட்டி இன்று மதியம் 4 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணிகளும் மோதின.

Dhoni

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது சென்னை அணி. அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கொல்கத்தா அணியின் துவக்க வீரரான க்றிஸ் லின் 51 பந்துகளில் 82 ரன்களை குவித்தார். இதில் 6 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் அடங்கும்.

- Advertisement -

அடுத்து 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரெய்னா 42 பந்துகளில் 58 ரன்களும், ஜடேஜா 17 பந்துகளில் 31 ரன்களையும் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இந்த போட்டியில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்திய சென்னை அணியின் இம்ரான் தாஹிர் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Tahir

போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் தாஹிர் கூறுகையில் : நாங்கள் போட்டியை ஜெயித்துவிட்டோம். இந்த வெற்றியையே நான் எதிர்பார்த்தேன். எப்போதும் சென்னை அணி வெற்றிபெறும் போது எனது பங்களிப்பு இருக்கையில் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.எனது வெற்றிக்கு பின் எனது குடும்பமும் இருக்கிறது. அவர்கள் எனக்கு தொடர்ந்து உற்சாகத்தினையும், உத்வேகத்தினையும் தருகின்றனர் அதனால் என்னால் சிறப்பாக செயல்பட முடிகிறது.

Tahir 1

மேலும், எப்போதும் தோனியுடன் விளையாடும்போது கடுமையாக உழைக்கிறேன். தோனி என்னிடம் கூறுவது ஒன்றுதான் விக்கெட் டூ விக்கெட் பந்து வீசுங்கள் நிச்சயம் பேட்ஸ்மேன் தவறு செய்வார் விக்கெட் கிடைக்கும் என்பார். அதேபோன்று நான் ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் வீசுகிறேன் விக்கெட் கிடைக்கிறது. சி.எஸ்.கே அணியில் இருப்பதை பெருமையாக நினைக்கிறன் என்று தாஹிர் கூறினார்.

Advertisement