முதல் சம்பவத்தையே வெளிநாட்டு மண்ணில் செய்த இளம் சந்தர்பால் – நாயகன் அவதரிப்பால் வெ.இ ரசிகர்கள் மகிழ்ச்சி

tagenarine chanderpaul
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் 2 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் வெஸ்ட் இண்டீஸ் முதல் சுற்றிலேயே கத்துக்குட்டிகளிடம் அடி வாங்கி ஆரம்பத்திலேயே வெளியேறி அதிர்ச்சியை சந்தித்தது. சமீப காலங்களாகவே தரமான வீரர்கள் இல்லாமல் இருக்கும் தரமான வீரர்களுக்கும் சம்பளத்தை கொடுக்க முடியாமல் அதள பாதாளத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி தள்ளாடுவது இதர நாட்டு ரசிகர்களை கூட கவலையடைய வைத்துள்ளது. ஏனெனில் கிரிக்கெட்டுக்கு நல்ல எதிரணிகள் அவசியம் என்ற நிலைமையில் 70, 80களில் ஜாம்பவான் வீரர்களால் உலகையே மிரட்டிய வெஸ்ட் இண்டீஸ் தற்போது சந்தித்துள்ள நிலைமையிலிருந்து வெளிவர வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

இருப்பினும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் கேப்டனாக இருந்த நிக்கோலஸ் பூரன் அந்த பதவியை ராஜினாமா செய்த நிலையில் உலக கோப்பையில் படுதோல்வியை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் அடுத்ததாக அதே ஆஸ்திரேலியாவுக்கு பயணித்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்க உள்ளது. வரும் நவம்பர் 30ஆம் தேதியன்று துவங்கும் இத்தொடருக்கு தயாராவகும் வகையில் ஏற்கனவே ஆஸ்திரேலியா பயணித்துள்ள கிரைக் ப்ரத்வைட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அங்கு ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிரான 4 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் விளையாடி வருகிறது.

- Advertisement -

அவதரிக்கும் நாயகன்:
நவம்பர் 23ஆம் தேதியன்று கான்பெரா நகரில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் ஆஸ்திரேலிய பிரதமர் அணி முதலில் பேட்டிங் செய்து தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 322 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மாட் ரென்ஷா 81 ரன்களும் மார்கஸ் ஹாரீஸ் 73 ரன்களும் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு முதல் முறையாக தேர்வாகியுள்ள முன்னாள் நட்சத்திர ஜாம்பவான் வீரர் சிவ்நரேன் சந்தர்பால் மகன் தக்நரேன் சந்தர்பால் தொடக்க வீரராக களமிறங்கி கேப்டன் ப்ரத்வெய்ட் உடன் கைகோர்த்து 94 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல அடித்தளம் அமைத்தார்.

அதில் கேப்டன் ப்ரத்வெய்ட் 47 ரன்களில் அவுட்டானதும் அடுத்து வந்த போனர் 0, டேவோன் தாமஸ் 8, கெய்ல் மேயர்ஸ் 6, ஜோஸ்வா டா சில்வா 15, ராஸ்டன் சேஸ் 10 என முக்கிய வீரர்கள் அனைவரும் எதிர்புறம் பொறுப்பின்றி வழக்கம் போல சொற்ப ரன்களில் அவுட்டாகி வேலையை காட்டினர். ஆனால் மறுபுறம் நங்கூரமாக நின்ற சந்தர்பால் தனது தந்தையைப் போலவே தரமான ஆஸ்திரேலிய பவுலர்களை அவர்களது சொந்த மண்ணில் சிம்ம சொப்பனமாக எதிர்கொண்டு சதமடித்தார். சொல்லப்போனால் இதர பேட்ஸ்மேன்கள் 100 பந்துகளை கூட எதிர்கொள்ளாத நிலையில் அவர் மட்டும் தனி ஒருவனாக 293 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டரி 1 சிக்சருடன் 119 ரன்களை குவித்து அவுட்டானார்.

- Advertisement -

குறிப்பாக தனது தந்தையை போலவே பவுலர்களை சோதித்து 40.61 என்ற டெஸ்ட் கிரிக்கெட்டுக்கே உரித்தான ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை குவித்த அவர் 2வது நாள் முழுமையாக பேட்டிங் செய்து மாலையில் ஆட்டமிழந்தார். அதன் காரணமாக 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 234/7 ரன்களை எடுத்துள்ள வெஸ்ட் இண்டீஸ் இன்னும் 88 ரன்கள் பின்தங்கியுள்ளது. இப்போட்டியில் தனது தந்தையை போலவே விளையாடிய அவர் ரசிகர்களை கவனத்தை ஈர்த்து பாராட்டுகளை பெற்று வருகிறார். அதைவிட இதுவரை உள்ளூர் அணிகளுக்காக மட்டுமே சதம் அடித்திருந்த அவர் இப்போதுதான் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் சதமடித்துள்ளார்.

அதை வெளிநாட்டு மண்ணில் அதுவும் சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் இவர பேட்ஸ்மேன்கள் திணறிய போது அவர் அடித்துள்ளது அவருடைய தரத்தை காட்டுகிறது என்றே கூறலாம். இதன் காரணமாக இத்தொடரின் முதல் போட்டியில் அவர் அறிமுகமாக களமிறங்குவதற்கான வாய்ப்பு 99% உறுதியாகியுள்ளது. அப்படி வீழ்ந்து கிடக்கும் தங்களது கிரிக்கெட் அணியை மீட்டெடுக்க நாயகன் போல் ஒருவர் வருவதற்கான அறிகுறிகள் தெரிவதால் வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

Advertisement