- Advertisement -
இந்திய கிரிக்கெட்

உங்க பொழுதுபோக்குக்கு நாங்க தான் கிடைச்சோமா? கொஞ்சம் நியாயம் காட்டுங்க.. இந்தியா மீது சம்சி அதிருப்தி

வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற 3வது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் சவால் விட்ட வங்கதேசத்தை 3 – 0 என்ற கணக்கில் வீழ்த்திய இந்தியா தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை நிரூபித்தது. குறிப்பாக ஹைதராபாத் நகரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் வங்கதேசத்தை அடித்து நொறுக்கிய இந்தியா 297-6 ரன்கள் குவித்தது.

இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த முழு அந்தஸ்து பெற்ற அணி என்ற சாதனையும் இந்தியா படைத்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 111, கேப்டன் சூரியகுமார் யாதவ் 75 ரன்கள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 298 ரன்களை துரத்திய வங்கதேசம் முடிந்தளவுக்கு போராடியும் 164-7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

சிறிய பவுண்டரிகள்:

அதிகபட்சமாக தவ்ஹீத் ஹ்ரிடாய் 63* ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரவி பிஸ்னோய் 3, மயங் யாதவ் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அந்த வகையில் பட்டாசாக விளையாடிய இந்தியா அப்போட்டியில் மொத்தம் 47 பவுண்டரிகள் அடித்தது. அதன் வாயிலாக ஒரு சர்வதேச போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற உலக சாதனையையும் இந்தியா நிகழ்த்தியது.

இந்நிலையில் ஹைதெராபாத் பிட்ச் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சமமாக இல்லை என்று தென்னாபிரிக்கா ஸ்பின்னர் தப்ரிஸ் சம்சி கூறியுள்ளார். அத்துடன் ரசிகர்களை கவர்வதற்காக அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்தியாவில் உள்ள மைதானங்களில் பவுண்டரி அளவு சிறியதாக இருப்பதாகவும் அவர் ஏமாற்றத்தை தெரிவித்துள்ளார். ஆனால் ரசிகர்களின் பொழுதுபோக்குக்காக பவுலர்கள் அடி வாங்குவதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சூறையாடப்பட்ட பவுலர்கள்:

இது பற்றி தப்ரிஸ் சம்சி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இது போன்ற போட்டிகள் பேட்ஸ்மேன்களுக்கு வேடிக்கையாக இருக்கும். ஆனால் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் நியாயமான போட்டியில்லாத இந்தப் போட்டியை தான் மக்கள் பார்க்க வேண்டுமா? இந்திய பேட்ஸ்மேன்களிடம் திறன் மற்றும் தரம் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை”

இதையும் படிங்க: 2 டக் அவுட்டால் கேரியர் முடிஞ்ச்சுன்னு நினைச்சேன்.. 96இல் சூரியகுமார் சொன்ன சுயநலத்தை செய்யல.. சாம்சன் பேட்டி

“ஆனால் அங்கே பேட் மற்றும் பந்து ஆகியவற்றுக்கிடையே சமநிலை இருக்க வேண்டும். பெரிய பவுண்டரி அளவு அல்லது பிட்ச்சில் பவுலர்களுக்கு அதிக உதவி கிடைத்தால் மட்டுமே சமநிலை ஏற்படும். கண்டிப்பாக இந்த 2 அணிகளின் தரத்தில் வித்தியாசம் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சமநிலையான போட்டிக்கு பவுண்டரியின் அளவு பெரிதாக இருக்க வேண்டும் அல்லது பிட்ச் பவுலர்களுக்கு கொஞ்சம் உதவிகரமாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -