2 டக் அவுட்டால் கேரியர் முடிஞ்ச்சுன்னு நினைச்சேன்.. 96இல் சூரியகுமார் சொன்ன சுயநலத்தை செய்யல.. சாம்சன் பேட்டி

sanju samson
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் 2015இல் அறிமுகமாகி நிலையான வாய்ப்புகளை பெறாமல் தவித்து வந்தார். அதனால் ஏராளமான ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பிசிசிஐக்கு எதிராக விமர்சனம் செய்தனர். அதே சமயம் இந்திய அணி நிர்வாகம் கொடுத்த அனைத்து வாய்ப்புகளையும் சஞ்சு சாம்சன் முழுமையாக பயன்படுத்தவில்லை என்றே சொல்லலாம்.

அதற்கு எடுத்துக்காட்டாக கடந்த இலங்கை டி20 தொடரில் வாய்ப்பு பெற்ற அவர் அடுத்தடுத்த போட்டிகளில் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதே போல நேற்று முடிந்த வங்கதேச டி20 தொடரில் அவருக்கு அல்வா போன்ற ஓப்பனிங் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த வாய்ப்பிலும் முதலிரண்டு போட்டியில் பெரிய ரன்கள் குவிக்காததால் சஞ்சு சாமான் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார்.

- Advertisement -

சஞ்சு சாம்சன் சாதனை:

இருப்பினும் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற 3வது போட்டியில் வங்கதேசத்தை நொறுக்கிய அவர் 111 (47) ரன்கள் விளாசினார். அதனால் இந்தியா 297-6 ரன்கள் குவித்து பின்னர் 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவிய சஞ்சு சாம்சன் ஆட்டநாயகன் விருது வென்றார். மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பராகவும் அவர் சாதனை படைத்தார்.

இந்நிலையில் இலங்கையில் அடுத்தடுத்து டக் அவுட்டானதால் கேரியர் முடிந்து விடுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டதாக சாம்சன் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த 3 வாரங்களுக்கு முன்பாக எனக்கு மெசேஜ் வந்தது. கௌதம் பாய், சூர்யா, அபிஷேக் நாயர் ஆகியோர் நான் ஓப்பனிங்கில் விளையாட உள்ளதாக சொன்னார்கள். அது சரியாக தயாராக எனக்கு உதவியது”

- Advertisement -

சுயநலம் செட்டாகாது:

“அதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அகாடமிக்கு சென்ற நான் புதிய பவுலர்களை அதிகம் எதிர்கொண்டேன். இலங்கையில் 2 டக் அவுட்டானதால் அடுத்த தொடரில் வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகத்துடன் இருந்தேன். ஆனால் அவர்கள் எப்படியிருந்தாலும் எனக்கு ஆதரவு கொடுப்பேன் என்று சொன்னார்கள். இந்தியாவுக்காக விளையாடுவது எளிதல்ல. அங்கே சில போட்டிகளில் சொதப்பும் போது சரி நாம் கொஞ்சம் நமக்காக சுயநலத்துடன் ரன்கள் அடிக்கலாம் என்ற வகையில் விளையாட முடியும்”

இதையும் படிங்க: சரவெடியாய் வெடித்த சாம்சன்.. சதமடித்த போது எழுந்து நின்று கைத்தட்டிய கம்பீர் – இதெல்லாம் எதுக்கு தெரியுமா?

“ஆனால் நான் நானாக என்னுடைய கேரக்டராகவே இருக்க விரும்புகிறேன். அது எப்போதும் மக்கள், நண்பர்கள், அணியைப் பற்றியது. 96 ரன்களில் இருந்த போது நான் சிக்ஸர் அடிக்கப்போகிறேன் என்று சூர்யாவிடம் சொன்னேன். அப்போது இந்த சதத்துக்கு நீங்கள் தகுதியானவர்கள் என்பதால் கொஞ்சம் எளிமையாக விளையாடுங்கள் என்று சூர்யா சொன்னார். ஆனால் அதை நான் செய்யவில்லை என்றாலும் சூர்யா மற்றும் கௌதம் பாய் எனக்கு கொடுக்கும் ஆதரவுக்காக மகிழ்ச்சி” என்று கூறினார்.

Advertisement