இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் மிகச் சிறப்பான வீரராக இருந்தும் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற பேச்சு பலரது மத்தியிலும் இருந்து வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே அவருக்கு நிலையான வாய்ப்பு கிடைத்தும் அவரால் பெரிய ரன்களை குவிக்க முடியவில்லை என்ற விமர்சனமும் அவர் மீது இருந்து வந்தது. ஏனெனில் ஜிம்பாவே அணிக்கு எதிரான தொடரின் போது அவர் இரண்டு முறை டக் அவுட் ஆகி ஏமாற்றத்தை அளித்திருந்தார்.
சஞ்சு சாம்சனின் சதத்தை கொண்டாடிய கம்பீர் :
அதனை தொடர்ந்து நிச்சயம் வங்கதேசம் அணிக்கு எதிரான தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் வாய்ப்பு பெற்ற சஞ்சு சாம்சங் முதல் 2 போட்டிகளிலும் அதிரடியாக விளையாட நினைத்து விரைவிலயே ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன் காரணமாக வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்று பலரும் நினைத்திருந்தனர். ஆனால் இந்திய அணியின் நிர்வாகம் அவரின் திறமை மீது நம்பிக்கை வைத்து மீண்டும் மூன்றாவது போட்டிக்கான வாய்ப்பு வழங்கியது. அந்த வகையில் நேற்று தனக்கு கிடைத்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்திய சஞ்சு சாம்சன் :
47 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் என 111 ரன்கள் அடித்து அசத்தினார். அதுமட்டும் இன்றி இந்திய அணி சார்பாக ரோகித் சர்மாவிற்கு அடுத்து அதிவேகமாக டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையும் அவர் நிகழ்த்தியிருந்தார். அதோடு டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையும் நிகழ்த்தி இருந்தார்.
இப்படி பல சாதனைகளை நிகழ்த்தி சஞ்சு சாம்சன் அசத்திய வேளையில் இந்த போட்டிக்கு முன்னதாக அவர் மீது கடுமையான விமர்சனம் இருந்தது. அதன் காரணமாக அவர் வெளியேற வேண்டும் என்று பலரும் பேசி வந்தனர். ஆனால் பயிற்சியாளர் கம்பீர் அவரின் திறமை மீது முழு நம்பிக்கை வைத்து அவருக்கு தொடர் வாய்ப்புகளை வழங்கினார்.
இதையும் படிங்க : அணிக்குள் இப்படி ஒரு போட்டி இருப்பதும் நல்லதுதான்.. பெஞ்சில் இருந்ததும் நல்லா இருந்தது – ரவி பிஷ்னாய் பேட்டி
அதன் காரணமாகவே சஞ்சு சாம்சங் அரைசதம் அடிக்கும் போதும், சதம் அடிக்கும் போதும் எழுந்து நின்று கம்பீர் கைதட்டி பாராட்டினார். அது தவிர்த்து சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்து ஓய்வறைக்கு வந்த போதும் அவரை கட்டி அணைத்து வரவேற்றார். இதற்கெல்லாம் காரணம் ஒருபுறம் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் அவரை நம்பி பேக்கப் செய்து வந்ததாலே அவரது இந்த ஆட்டத்தை கம்பீர் வெகுவாக ரசித்திருந்தார்.



