அணிக்குள் இப்படி ஒரு போட்டி இருப்பதும் நல்லதுதான்.. பெஞ்சில் இருந்ததும் நல்லா இருந்தது – ரவி பிஷ்னாய் பேட்டி

Ravi-Bishnoi
- Advertisement -

கடந்த சில தொடர்களாகவே இந்திய அணி புதுப்புது வீரர்களை அணியில் இணைத்து அவர்களை விளையாட வைத்து சோதனைகளை நடத்தி வரும் வேளையில் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவி பிஷ்னாய் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். கடந்த உலகக்கோப்பை டி20 தொடரை இந்திய அணி வென்ற பிறகு தற்போது மீண்டும் அவருக்கு வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.

இந்திய அணிக்குள் போட்டி இருப்பது நல்லதுதான் :

உலகின் நம்பர் ஒன் டி20 பவுலராக இருந்த அவருக்கே கடந்த சில தொடர்களாக வாய்ப்பு கிடைக்காதது பலரது மத்தியிலும் பேசு பொருளாக மாறியிருந்த வேளையில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியிலும் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதற்கு காரணம் மற்ற வீரர்களுக்கும் வாய்ப்பு அளித்து அவர்களது திறனையும் சோதிக்க வேண்டும் என்பதுதான்.

- Advertisement -

இருப்பினும் நல்ல பார்மில் இருக்கும் அவரை விளையாட வைக்க வேண்டும் என்ற பேச்சு இருந்து வந்தது. அந்த வகையில் நேற்றைய வங்கதேசம் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது அவர் ஒரு வழியாக நீண்ட இடைவெளிக்கு பின்னர் பிளேயிங் லெவனில் இடம் பிடித்தார். அப்படி தான் விளையாடிய இந்த போட்டியில் 4 ஓவர்களை வீசிய அவர் 1 மெய்டன் உட்பட 30 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது செயல்பாடு குறித்து பேசியிருந்த ரவி பிஷ்னாய் கூறுகையில் : இந்த போட்டியில் எடுத்த மூன்று விக்கெட்டுகளின் மூலம் நான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியதில் மகிழ்ச்சி. ஒரு சிறிய சாதனையை இதன் மூலம் நான் செய்துள்ளதாக நினைக்கிறேன்.

- Advertisement -

இந்திய அணிக்குள் தற்போது சுழற்பந்து வீச்சாளர்களுக்கான போட்டி அதிகம் இருக்கிறது. உண்மையிலேயே இந்த போட்டி இருப்பது அணிக்கு நல்லது தான். அந்த அளவிற்கு நாம் வலுவாக இருக்கிறோம் என்று நினைக்கிறேன். அதே போன்று போட்டியை வெளியில் இருந்து பார்ப்பதும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

இதையும் படிங்க : 4 ஆவது இந்திய வேகப்பந்து வீச்சாளராக டி20 கிரிக்கெட்டில் மாயங்க் யாதவ் செய்த – அசத்தல் சாதனை

ஏனெனில் போட்டியை பெஞ்சில் அமர்ந்து பார்க்கும் போது நம்முடைய பவுலிங்கில் என்னென்ன மேம்பாடுகளை செய்யலாம்? எவ்வாறு நமது திறன்களை அதிகரித்துக் கொள்ளலாம்? என்பது தெரிகிறது. இந்த தொடர் முடிந்து கிடைக்கும் இடைவெளியை நான் என்னை முன்னேற்றிக்கொள்ள பயன்படுத்திக்கொள்வேன் என ரவி பிஷ்னாய் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement