ஜூன் 17 தான் கடைசி.. இந்தியாவில் நடைபெறும் அந்த தொடருக்கு வரமாட்டேன்.. ட்ரெண்ட் போல்ட் அறிவிப்பு

Trent Boult
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. பொதுவாகவே இந்தியா போன்ற அணிகளுக்கு ஐசிசி தொடரில் சவாலை கொடுக்கக்கூடிய அணியாக கருதப்படும் நியூசிலாந்து இம்முறை செமி ஃபைனலுக்கு செல்லும் என்று பலரும் கணித்தனர். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோற்ற நியூஸிலாந்து முதல் முறையாக ஆப்கானிஸ்தானிடமும் தோல்வியை சந்தித்தது.

அதனால் 1987க்குப்பின் 37 வருடங்கள் கழித்து முதல் முறையாக ஒரு ஐசிசி தொடரில் லீக் சுற்றுடன் நியூசிலாந்து வெளியேறியது. அந்த நிலையில் உகாண்டாவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. குறிப்பாக உகாண்டாவை 40 ரன்களுக்கு சுருட்டிய நியூசிலாந்து டி20 கிரிக்கெட்டில் தங்களுடைய பெரிய வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

போல்ட் அறிவிப்பு:
இதைத் தொடர்ந்து வீட்டுக்கு கிளம்புவதற்கு முன்பாக ஜூன் 17ஆம் தேதி பப்புவா நியூ கினியாவை தங்களுடைய கடைசிப் போட்டியில் நியூசிலாந்து எதிர்கொள்கிறது. இந்நிலையில் அதுவே தம்முடைய டி20 உலகக் கோப்பை போட்டி என்று நியூஸிலாந்து நட்சத்திர வீரர் ட்ரெண்ட் போல்ட் அறிவித்துள்ளார். ஐபிஎல் போன்ற டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி தன்னுடைய குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்காக ஏற்கனவே அவர் 2022ஆம் ஆண்டு நியூசிலாந்தின் மத்திய சம்பள ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினார்.

இருப்பினும் நாட்டுக்காக ஐசிசி தொடர்களில் மட்டும் விளையாடுவதற்கு அவர் முடிவெடுத்திருந்தார். ஆனால் தற்போது 34 வயதாகும் அவர் இந்தியாவில் நடைபெறும் 2026 டி20 உலகக் கோப்பையில் விளையாட மாட்டேன் என்று அறிவித்துள்ளார். இது பற்றி ட்ரெண்ட் போல்ட் பேசியது பின்வருமாறு. “இந்த தொடரில் சில மகத்தான அப்செட்டுகள் நடந்துள்ளது. எடுத்துக்காட்டாக நேபாள் 1 ரன் வித்தியாசத்தில் துரதிஷ்டவசமாக வெற்றியை தவற விட்டதை பார்த்தேன்”

- Advertisement -

“அது டி20 போட்டிகள் எந்த அளவுக்கு நெருக்கமானது என்பதையும் இந்த உலகக்கோப்பை எவ்வளவு தரமாக இருக்கிறது என்பதையும் காண்பிக்கிறது. இருப்பினும் ஏற்கனவே சொன்னது போல் சூப்பர் 8 தகுதி பெறாததால் நான் மனமுடைந்துள்ளேன். நாங்கள் இந்த தொடரின் ஆரம்பத்திலேயே தோற்கடிக்கப்பட்டோம். நல்ல காரணத்திற்காக துரதிஷ்டவசமாக நாங்கள் தகுதி பெறவில்லை”

இதையும் படிங்க: விராட் கோலியின் ரசிகன்.. இதுக்காகவே இந்தியாவுக்கு எதிரா விளையாட பெருமைப்படுறோம்.. கனடா வீரர்கள் பேட்டி

“ஆனால் டி20 போட்டிகள் இப்படித் தான் செல்லும். என்னுடைய சார்பாக பேசும் எனக்கு இதுவே கடைசி டி20 உலக கோப்பை. அதைத்தான் நான் சொல்ல வேண்டியுள்ளது. நியூசிலாந்து அணியில் இன்னும் நிறைய திறமை இருக்கிறது” என்று கூறினார். நவீன கிரிக்கெட்டில் மகத்தான இடது கை வேகப்பந்து வீச்சாளராக போற்றப்படும் ட்ரெண்ட் போல்ட் இப்படி டி20 உலகக் கோப்பையில் விடை வருவதாக அறிவித்துள்ளது இந்திய ரசிகர்களையே ஏமாற்றமடைய வைத்துள்ளது.

Advertisement