- Advertisement -
உலக கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி பெற்ற மொத்த பரிசுத்தொகை – எவ்வளவு தெரியுமா?

ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி துவங்கிய ஐ.சி.சி-யின் எட்டாவது டி20 உலக கோப்பை தொடரானது நேற்று நவம்பர் 13-ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி, பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெடுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே குவித்தது.

- Advertisement -

பின்னர் 138 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியானது 19 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி பெற்ற இந்த வெற்றிக்கு உலகெங்கிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இவ்வேளையில் இந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற இங்கிலாந்து அணிக்கு கிடைத்த மொத்த பரிசுத்தொகை எவ்வளவு என்கிற விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணிக்கு இந்திய மதிப்பில் சுமார் 13 கோடியே 84 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : இப்படியெல்லாம் சொல்லி சண்டையை வளக்காதீங்க ப்ளீஸ் – முகமது ஷமிக்கு ஷாஹித் அப்ரிடி அட்வைஸ்

அதேபோன்று இரண்டாம் இடம் பிடித்த பாகிஸ்தான் அணிக்கு 7 கொடியை 40 லட்ச ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இந்த தொடரில் அரையிறுதியோடு வெளியேறிய இந்திய அணிக்கு 4 கோடியே 50 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by