டி20 உ.கோ : அரையிறுதி போட்டிகளுக்கான அட்டவணை வெளியானது – இந்திய அணி மோதப்போவது யாருடன்?

Semi Finals
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி துவங்கிய எட்டாவது டி20 உலக கோப்பை தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றுடன் நடைபெற்று முடிந்த சூப்பர் 12 சுற்றுகளின் அடிப்படையில் இந்த தொடரில் பங்கேற்ற 12 அணிகளில் நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தேர்வாகியுள்ளன. அந்த வகையில் குரூப் ஒன்றில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் இரண்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

Semi-Finals-1

- Advertisement -

இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணியும், பலம் வாய்ந்த அணியான பார்க்கப்பட்ட தென்னாப்பிரிக்கா போன்ற அணிகள் தோல்வியை தழுவி வெளியேறியது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் இந்த அரையறுதி போட்டிகளுக்கான அட்டவணை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. அதன்படி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கும் முதலாவது அரையிறுதி போட்டியில் குரூப் ஒன்றில் முதலிடம் பிடித்த நியூஸிலாந்து அணியும், குரூப் இரண்டில் இரண்டாம் இடம் பிடித்த பாகிஸ்தான் அணியும் வரும் புதன்கிழமை நவம்பர் 9-ஆம் தேதி மோத இருக்கிறது.

INDvsENG

அதனை தொடர்ந்து விழாக்கிழமை நவம்பர் 10-ஆம் தேதி அடிலெயிடு மைதானத்தில் குரூப் இரண்டில் முதலிடம் பிடித்த இந்திய அணியும், குரூப் ஒன்றில் இரண்டாம் இடம் பிடித்த இங்கிலாந்து அணியும் மோத இருக்கின்றன.

- Advertisement -

இப்படி நவம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் இந்த இரண்டு அரையிறுதி போட்டியிலும் வெற்றி பெறும் அணிகள் வரும் நவம்பர் 13-ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இறுதிப்போட்டியில் மோத உள்ளது.

இதையும் படிங்க : பேட்டிங்கில் தடுமாறினாலும் கேப்டனாக ஜொலிக்கும் ரோகித் சர்மா – டி20 கிரிக்கெட்டில் 2 புதிய உலக சாதனை

இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகும் அணி எது என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement