இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை தொடரானது தற்போது இந்தியாவில் இருக்கும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தாக்கம் காரணமாக இங்கு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக ஏற்கனவே ஐசிசி இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஆன பிசிசிஐக்கு போதிய கால அவகாசம் கொடுத்து இந்த டி20 உலக கோப்பை தொடரை நடத்தும் இடம் குறித்த அறிக்கையை கேட்டது.
அதன்படி தற்போது இந்தியாவில் திட்டமிடப்பட்டிருந்த இந்த உலகக்கோப்பை தொடரானது இங்கு நடை நடத்த முடியாத சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் மாற்றப்பட இருப்பதாக தற்போது நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் இந்த தொடருக்கான தேதிகளும் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி கிடைத்த தகவலின் பேரில் 14வது ஐபிஎல் தொடரானது மீண்டும் எஞ்சியுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்றும் அந்த ஐபிஎல் தொடர்ந்த தொடர் முடிந்த இரண்டே நாட்களில் அதாவது அக்டோபர் 17ஆம் தேதி டி20 உலக கோப்பை தொடர் துவங்கும் என்றும் நவம்பர் 14ஆம் தேதி இறுதி போட்டி நடைபெற வாய்ப்பு உள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன .
இந்தியாவில் நடைபெற்று ஒத்திவைக்கப்பட்ட 14வது ஐபிஎல் தொடரானது மீண்டும் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை நடத்தி முடிக்கப்படும் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது ஐபிஎல் முடிந்து இரண்டு நாட்களிலேயே அக்டோபர் 16ஆம் தேதி இந்த டி20 உலகக்கோப்பை தொடரானது துவங்க உள்ள செய்தி ரசிகர்களிடையே தற்போது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது..