ஐ.பி.எல் ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி. தள்ளிப்போக இருக்கும் டி20 உலகக்கோப்பை – விவரம் இதோ

Ipl cup

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி வரும் நிலையில் மக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொருளாதாரம் தாறுமாறாக தத்தளித்து வருகிறது. குறிப்பாக ஒலிம்பிக் உட்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படவில்லை. இதனால் விளையாட்டு நிர்வாகங்கள் பெரும் சரிவினை சந்திக்க உள்ளன.

IPL-1

மேலும் இந்தியாவில் நடைபெற இருந்த பிரமாண்ட தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை தொடர் குறித்த சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் அனைத்து எல்லைகளும் 6 மாதத்துக்கு மூடப்பட்டுள்ளதால் வரும் அக்டோபர் மாதம் திட்டமிட்டபடி டி20 உலக கோப்பை தொடர் நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்தது.

இதற்கிடையில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்த முடிவு குறித்து மே 28-ஆம் தேதி நடக்க உள்ள கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த முடிவில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. ஏனெனில் ஐசிசி நடத்தும் இந்த கூட்டத்தில் உலக கோப்பை தொடர் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

Cup

அதில் இந்த தொடரை எவ்வாறு நடத்துவது, பந்தில் எச்சில் பயன்படுத்துவது மற்றும் காலி மைதானத்தில் போட்டி நடத்துவது போன்றவை குறித்து பல விஷயங்கள் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில் உலக கோப்பை தொடர் தள்ளிப் போகும் பட்சத்தில் அந்த காலகட்டத்தில் ஐபில் கிரிக்கெட் தொடரை நடத்த வாய்ப்புள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில் : என்னை பொறுத்தவரை டி20 உலக கோப்பை தொடர் இன்று நடப்பது சந்தேகம்தான். அதே காலகட்டத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த வாய்ப்புள்ளது. கிரிக்கெட் போட்டிகள் தொடங்க இன்னும் இரண்டு மாதங்கள் முதல் நான்கு மாதங்கள் வரை ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

CskvsMi

ஏற்கனவே வெளியான தகவலின்படி இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த டி20 உலக கோப்பை தொடர் நடைபெறாது என்றும் அந்தத் தொடர் இரண்டு ஆண்டுகள் தள்ளி வைக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்ற தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.