டி20 உலகக்கோப்பை நடக்குமா ? நடக்காதா ? வெள்ளிக்கிழமை வெளியாகும் ரிசல்ட் இதுதான் – ஐ.சி.சி முடிவு இதோ

Cup

இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற இருந்த ஐசிசி t20 உலகக் கோப்பை தொடர் குறித்த செய்திகள் தான் இப்பொழுது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஏனெனில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நடைபெறவில்லை.

இந்நிலையில் கடந்த மார்ச் மாத இறுதியில் இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடரும் காலவரையறையின்றி தள்ளி வைக்க ப்பட்டதால் கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அதனைப் போக்கும் விதமாக ஐசிசி நடத்தவிருந்த இந்த டி20 தொடரை நடத்தும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் இந்த கொரோனா வைரஸ் காரணமாக இந்த தொடர் ரத்து செய்யப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஐசிசி வரும் வெள்ளிக்கிழமை முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளது.

icc

அதன்படி ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே கொரோனா பாதிப்பு காரணமாக கடும் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள நிலையில் தற்போது இந்த தொடரை தள்ளிவைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த தொடரை தள்ளி வைத்தாலோ அல்லது ஒத்தி வைத்தால் மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்பதால் ஐசிசி குழம்பி உள்ளது.

- Advertisement -

ஆனாலும் இந்த வாரம் வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் ஐசிசி கூட்டத்தில் டி20 தொடரை ஒத்தி வைப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அந்த தகவலை வலுசேர்க்கும் விதமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்திடம் இருந்து அடுத்த ஆண்டுக்கு இத்தொடர் ஒத்தி வைக்கப்படும் என்றும் அதிகாரப்பூர்வமற்ற தகவல் கசிந்துள்ளன.