டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அதிகாரபூர்வ அறிவிப்பு – லிஸ்ட் இதோ

IND
Advertisement

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் போது கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியானது பரிதாபமாக தோல்வியை சந்தித்து அந்த தொடரில் இருந்து வெளியேறியதன் பின்னர் டி20 கிரிக்கெட்டில் நிச்சயம் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாலில் நடைபெற இருக்கும் உலக கோப்பை தொடரை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக பல மாற்றங்களை செய்யப்பட்டது.

Bhuvneswar Kumar INDIA

குறிப்பாக கேப்டன் விராத் கோலி பதவி விலகியதால் புதிய கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் ஏகப்பட்ட இளம் வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு கொடுக்கப்பட்டு இந்திய அணி பலமாக கட்டமைக்கப்பட்டது. இந்நிலையில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை தொடரிலும் இந்திய அணி சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த தொடரில் இருந்து வெளியேறியது.

- Advertisement -

இதனால் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியில் இருந்தது. இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ அதிகாரபூர்வமாக இன்று வெளியிட்டுள்ளது.

அதில் காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேறிய ஜடேஜாவிற்கு பதிலாக அக்சர் பட்டேல் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோன்று நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை தொடரினை காயம் காரணமாக தவறவிட்ட ஹர்ஷல் பட்டேல் மற்றும் பும்ரா ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். அதனை தவிர்த்து ஆசிய கோப்பையில் விளையாடிய பெரும்பாலான வீரர்கள் இந்த உலகக் கோப்பை தொடருக்கான அணிலும் இடம் பிடித்துள்ளனர்.

- Advertisement -

ஏற்கனவே இந்திய அணியில் உள்ள வீரர்கள் ஆசிய கோப்பை தொடரில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்த வேளையில் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் உலகக்கோப்பை தொடருக்கு செல்லும் இந்திய அணியின் செயல்பாடு எவ்வாறு இருக்கப் போகிறது என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் இதோ :

இதையும் படிங்க : SL vs PAK : வீழ்ந்த பாகிஸ்தான், இலங்கையின் வெற்றியை வெறித்தனமாக கொண்டாடிய ஆப்கன் ரசிகர்கள் – வீடியோ உள்ளே

1) ரோஹித் சர்மா, 2) கே.எல் ராகுல், 3) விராட் கோலி, 4) சூரியகுமார் யாதவ், 5) தீபக் ஹூடா, 6) ரிஷப் பண்ட், 7) தினேஷ் கார்த்திக், 8) ஹார்டிக் பாண்டியா, 9) ரவிச்சந்திரன் அஷ்வின், 10) யுஸ்வேந்திர சாஹல், 11) அக்சர் படேல், 12) பும்ரா, 13) புவனேஷ்வர் குமார், 14) ஹர்ஷல் பட்டேல், 15) அர்ஷ்தீப் சிங்

Advertisement