2 டீம்ல யார் ஜெயிச்சாலும் புதிய ரெக்கார்ட் கன்பார்ம்.. இறுதிப்போட்டிக்கு போகப்போவது யார்? – விவரம் இதோ

RSA-vs-AFG
- Advertisement -

2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடி வந்த இந்த தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய 8 அணிகளில் நான்கு அணிகள் அடுத்த சுற்றான அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த அரையிறுதி போட்டிகள் நாளை முதல் நடைபெற இருக்கின்றன.

அந்த வகையில் குரூப் ஒன்றிலிருந்து இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணியும், குரூப் இரண்டிலிருந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

- Advertisement -

அந்த வகையில் நடைபெறப்போகும் இந்த அரையிறுதி சுற்று முதல் போட்டியில் முதலாவதாக ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத இருக்கின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வேளையில் ஒரு வரலாற்று சாதனையும் நடைபெற காத்திருக்கிறது.

அதாவது இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும் முதல் முறையாக ஐசிசி தொடரின் இறுதி போட்டிக்கு செல்ல உள்ளது. ஏற்கனவே தென்னாபிரிக்க அணி ஏழு முறை ஐசிசி தொடர்களில் அரையிறுதி வரை சென்றிருந்தாலும் அந்த 7 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து அந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

- Advertisement -

அதேபோன்று ரஷீத் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் முதல் முறை அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள வேளையில் அவர்கள் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மும்பைக்காரன் வெளிநாட்டுக்கு போனாலும் இதைத்தான் விரும்புவான் – நியூயார்க்கில் இருந்து சச்சின் வெளியிட்ட பதிவு

எனவே இவ்விரு அணிகளில் எந்த அணி இறுதிப் போட்டிக்கு சென்றாலும் முதல் முறையாக ஐ.சி.சி தொடரின் இறுதிப்போட்டிக்கு சென்று அந்த சாதனையை படைப்பார்கள். இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த அரையிறுதி போட்டி ஜூன் 27-ஆம் தேதி பார்படாஸ் நகரில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement