- Advertisement -
ஐ.பி.எல்

டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இருந்து மிட்சல் ஸ்டார்க் விலகல்.. நடராஜனுக்கு அடித்த அதிர்ஷ்டம் – விவரம் இதோ

இந்தியாவில் மிகச் சிறப்பாக நடைபெற்று வந்த நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது மே 8-ஆம் தேதி தரம்சாலா நகரில் நடைபெற்ற போட்டியுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான பதட்டமான போர் சூழல் காரணமாக இந்த தொடரானது ஒரு வார காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டிருந்தது.

மிட்சல் ஸ்டார்க் வெளியேற்றத்தால் நடராஜனுக்கு அடித்த அதிர்ஷ்டம் :

அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் தற்போதைய சூழல் இயல்பு நிலைக்கு திரும்பும் வேளையில் இந்த வாரம் இறுதியில் 16-ஆம் தேதி ஐபிஎல் தொடரானது துவங்க இருப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகின. மேலும் எஞ்சியுள்ள 17 ஆட்டங்களை சென்னை, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய மூன்று நகரங்களில் மட்டுமே நடத்தவும் திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த 2025 ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய வெளிநாட்டு வீரர்கள் பலரும் தங்களது தாயகத்திற்கு திரும்பிய வேளையில் மீண்டும் அவர்களை இந்தியாவிற்கு வரும்படி நிர்பந்திக்கப் போவதில்லை என்றும் வர விருப்பம் இருக்கும் வீரர்களைக் கொண்டு ஐபிஎல் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

இந்தாண்டு டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் அந்த அணிக்காக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வெற்றிகளில் பங்காற்றியிருந்தார். இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியா சென்றிருக்கும் அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியை கருத்தில் கொண்டு மீண்டும் ஐபிஎல் தொடரில் துவங்கினாலும் தான் விளையாட இந்தியா வரமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மேனேஜரும் இந்தியாவில் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் மிட்சல் ஸ்டார்க் விளையாட மாட்டார் என்று உறுதி செய்துள்ளார். இதன் காரணமாக எஞ்சியுள்ள இந்த தொடரில் இருந்து அவர் விலகுவது உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக தற்போது தமிழக வீரரான நடராஜனுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது என்றே கூறலாம். ஏனெனில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக 10 கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் எடுக்கப்பட்ட அவருக்கு இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்து வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த வந்தது.

இதையும் படிங்க : அவ்ளோ ஈஸி கிடையாது.. ஆனாலும் இதுதான் சரின்னு நினைக்குறேன் – ஓய்வை அறிவித்த கிங் விராட் கோலி

கடைசியாக நடைபெற்ற இரண்டு போட்டியில் தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் மிட்சல் ஸ்டார்க் எஞ்சியுள்ள இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளதால் அவருக்கு பதிலாக இனி வரப்போகும் போட்டிகளுக்கான முதன்மை அணியில் விளையாட நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது உறுதி.

- Advertisement -