வேறு வழி இல்லாமல் “ட்ராவில் ” முடிந்த T20.! கிரிக்கட் வரலாற்றில் முதல் முறை..!

- Advertisement -

ஸ்காட்லாந்து, ஐயர்லாந்து, நெதர்லாந்து மோதும் முத்தரப்பு டி 20 போட்டிகள் நெதர்லாந்தில் நடந்து வருகிறது. இம்ம்மாதம் (ஜூன் )12 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 4 போட்டிகள் முடிந்துள்ளது. அதில் டி20 போட்டி வரலாற்றில் முதன் முறையாக இந்த தொடரில் நடைபெற்ற 4 வது போட்டி டிராவில் முடிந்துள்ளது.

Scotland

- Advertisement -

இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் நெதர்லாந்து அணி 2 போட்டிகளிலும், ஐயர்லாந்து அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் 4 வது போட்டி ரோடெர்டேம் மைதானத்தில் கடந்த ஞற்று கிழமை ஜூன் 17 ஆம் தேதி நடைபெற்றது. அதில் ஐயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வேண்டு முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பின்னர் விளையாடிய ஸ்காட்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களை எடுத்து. அந்த அணியில் அதிகபட்சமாக ஜார்ஜ் முன்ஷி 46 ரன்களும், மேக்லியாட் 46 ரன்களும் எடுத்திருந்தனர்.

Ireland

பின்னர் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கியது ஐயர்லாந்து அணி. பொறுப்பாக விளையாடி வந்து ஐயர்லாந்து அணி ஒருபக்கத்தில் சிரீனா இடைவெளியில் விக்கெட்டையும் பறிகொடுத்து கொண்டிருந்தது. இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு இருந்த நிலையில், போட்டியில் கடைசி பந்தில் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இருந்த போது, ஐயர்லாந்து அணி 2 ரன்களை மட்டுமே எடுத்து. இறுதியில் அந்த அணியும் 185 ரன்களை மட்டுமே எடுத்திருந்தால் போட்டி டிராவில் முடிந்தது.

Advertisement