திட்டமிட்டே அவரோட டெஸ்ட் கேரியரை முடிச்சிட்டாங்க. இதெல்லாம் பி.சி.சி.ஐ செய்யும் அரசியல் தான் – சையத் கிர்மானி

Kirmani
- Advertisement -

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் விரைவில் நிறைவுக்கு வருகிறது. அதை தொடர்ந்து இந்த 2 அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் பிப்ரவரி 16, 18, 20 ஆகிய தேதிகளில் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

prasidh 1

- Advertisement -

வரும் பிப்ரவரி 20ஆம் தேதியுடன் இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தனது தாயகம் திரும்ப உள்ளது. அதைத்தொடர்ந்து அண்டை நாடான இலங்கைக்கு எதிராக தனது சொந்த மண்ணில் 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் இந்தியா விளையாட உள்ளது.

கழற்றிவிடப்படும் மூத்த வீரர்கள்:
இந்த தொடருக்கான இந்திய அணி வரும் வாரங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக முதலில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை அறிவிக்கும் போது இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டன் யார் என்ற அறிவிப்பும் வெளியாகும் நம்பப்படுகிறது. ஏனெனில் கடந்த 2014 முதல் டெஸ்ட் கேப்டனாக வெற்றிகரமாக செயல்பட்டு வந்த விராட் கோலி கடந்த மாதம் திடீரென அந்த பதவியில் இருந்து விலகினார்.

saha

தற்போதயை நிலைமையில் ஏற்கனவே வெள்ளைப் பந்து கிரிக்கெட் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள அனுபவ வீரர் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளுக்கும் கேப்டனாக அறிவிக்கப்படுவார் என ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இலங்கைக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் சமீப காலங்களாக மோசமாக செயல்பட்டு வரும் ஒரு சில மூத்த வீரர்களை கழற்றிவிட இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

ரித்திமான் சஹா:
குறிப்பாக கடந்த சில வருடங்களாக டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் திண்டாடி வரும் அஜிங்கிய ரஹானே மற்றும் செடேஸ்வர் புஜாரா ஆகியோருக்கு இலங்கை தொடரில் வாய்ப்பு கிடைப்பது கடினம் என தெரியவருகிறது. அத்துடன் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வண்ணம் ரித்திமான் சஹா, இஷாந்த் சர்மா ஆகியோருக்கு இலங்கை டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்காது என தெரியவந்துள்ளது. இதை அறிந்த காரணத்தால் தான் சஹா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் ரஞ்சி கோப்பையில் பங்கேற்காமல் புறக்கணித்து விட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

saha

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிலவும் அரசியலால் ரிதிமான் சஹா வீழ்த்தப்பட்டு விட்டார் என முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் சயீத் கிர்மணி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியது பின்வருமாறு. “ரிதிமான் சஹா இன்னும் கூட ஒரு நல்ல விக்கெட் கீப்பர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடுவதால் அவருக்கு அதிகப்படியான வாய்ப்புகள் கிடைக்கிறது. 37 வயதானாலும் கூட சஹா ஒரு நல்ல விக்கெட் கீப்பர் என்பதால் அவர் இதற்காக வருத்தமடைய கூடாது.

- Advertisement -

தினேஷ் கார்த்திக் மற்றும் பார்திவ் படேல் ஆகியோரும் கூட இதே வழியில் கழட்டி விடப்பட்டார்கள்” என கூறியுள்ளார். இந்தியாவுக்காக விளையாடிய முன்னாள் விக்கெட் கீப்பர்களான தினேஷ் கார்த்திக் மற்றும் பார்த்தீவ் பட்டேல் ஆகியோருக்கு ஏற்பட்ட நிலைமை தற்போது சஹாவுக்கு ஏற்பட்டுள்ளதாக அவர் தனது வருத்தத்தை பதிவிட்டுள்ளார்.

Saha

பிசிசிஐ அரசியில்:
“இந்த வருடங்களில் தலை குனியாத அளவுக்கு நீங்கள் (சஹா) இந்தியாவுக்காக மிகச்சிறப்பாக பங்காற்றி உள்ளீர்கள். நீங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட குழுவிலும் ஒரு பகுதியாக இல்லாத காரணத்தால் நீக்கப்பட்டுள்ளீர்கள். மேலும் அரசியலால் வீழ்த்தப்பட்டுள்ளீர்கள். இருந்தாலும் கூட என்னைப் பொறுத்தவரை நீங்கள் ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் என எப்போதும் நினைவில் வைத்துக்கொள்வேன்” என இது பற்றி சையத் கிர்மனி மேலும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கடந்த 2010ஆம் ஆண்டு இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான ரித்திமான் சாஹா இதுவரை 40 போட்டிகளில் விளையாடி உள்ளார். அவர் அறிமுகமான காலத்தில் எம்எஸ் தோனி இருந்ததால் அவருக்கு பெரும்பாலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் தோனி ஓய்வு பெற்ற பின் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைத்த போதிலும் அதில் அவர் குறிப்பாக வெளிநாடுகளில் பெரிய அளவில் ரன்கள் குவிக்க தவறியதால் பின்னர் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டார்.

இதையும் படிங்க : INDvsWI : 3ஆவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

இருப்பினும் இப்போதும் கூட ரித்திமான் சாஹா ரிஷப் பண்ட்டை விட ஒரு மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் என்பதில் சந்தேகமில்லை. மேலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் தற்போது ஒரு சில பிரிவுகள் குழுக்களாக செயல்படுவதாக தெரிவித்துள்ள சயீத் கிர்மனி அதில் தன்னை ஒருவராக சேர்த்துக்கொள்ளாத காரணத்தாலேயே சஹாவுக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை என கூறியுள்ளார். மேலும் இந்திய அணி நிர்வாகத்தில் நிலவும் அரசியல் காரணமாக சகாவுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement