INDvsWI : 3ஆவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

ind
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற அடுத்ததாக நடந்த 2-வது போட்டியிலும் 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் காரணமாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 க்கு 0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி உள்ளது.

INDvsWI

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் ஆட்டம் வெறும் சம்பிரதாய ஆட்டமாக இன்று நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இன்று நடக்க உள்ள மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி ஏற்கனவே இந்த ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பிடித்த இடது கை துவக்க வீரரான ஷிகார் தவான் மீண்டும் அணிக்கு திரும்புவார் என்று தெரிகிறது. அகமதாபாத்தில் நடைபெறும் இந்த ஒருநாள் தொடருக்கு முன்னதாக பயிற்சிக்கு வந்த இந்திய வீரர்களில் ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சைனி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சையில் இருந்து மீண்டு உள்ளனர்.

dhawan

இதன் காரணமாக அனுபவ வீரர் தவான் மீண்டும் துவக்க வீரராக அணிக்கு திரும்புவார் என்று தெரிகிறது. ஏற்கனவே 2வது ஒருநாள் போட்டி நடைபெற்று முடிந்த வேளையில் கேப்டன் ரோகித் தவான் அடுத்த போட்டியில் அணிக்கு திரும்புவார் என்று உறுதியளித்திருந்தார். இதன் காரணமாக நிச்சயம் இன்றைய போட்டியில் தவான் மற்றும் ரோகித் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்குவார்கள். அவர்களை தவிர்த்து வேறு எந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும் என்பது போட்டியின் ஆரம்பத்தில் தான் தெரியும்.

- Advertisement -

அதன்படி இன்றைய போட்டியில் தீபக் ஹூடா வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக தவான் இடம்பெற வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது. மற்றபடி அணியில் என்ன மாற்றங்கள் என்பது போட்டியின் ஆரம்பத்தில் தான் தெரியவரும். இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : ஐபிஎல் ஏலத்தில் இந்தவொரு விஷயத்துக்கு ஒரு லிமிட் வைக்க வேண்டும் – சுனில் கவாஸ்கர் கோரிக்கை

1) ரோஹித் சர்மா, 2) ஷிகர் தவான், 3) விராட் கோலி, 4) கே.எல் ராகுல், 5) ரிஷப் பண்ட், 6) சூரியகுமார் யாதவ், 7) வாஷிங்க்டன் சுந்தர், 8) ஷர்துல் தாகூர், 9) முகமது சிராஜ், 10) யுஸ்வேந்திர சாஹல், 11) பிரசித் கிருஷ்ணா.

Advertisement