- Advertisement -
ஐ.பி.எல்

இந்த ஒரே திட்டத்தை வெச்சு பஞ்சாப்பை முடிச்சேன்.. ஜுன் 3இல் வெறித்தனமா கொண்டாடுவோம்.. சூயஸ் பேட்டி

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக மே 29ஆம் தேதி நடைபெற்ற குவாலிபயர் 1 போட்டியில் பஞ்சாப்பை 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப்பை அபாரமாக பவுலிங் செய்த பெங்களூரு 101 ரன்களுக்கு சுருட்டி வீசியது.

பிரியான்ஸ் ஆர்யா 7, ஜோஸ் இங்லிஷ் 4, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 2, நேஹல் வதேரா 8, சசாங் சிங் 3, முஷீர் கான் 0 என பஞ்சாப்புக்கு முக்கிய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதிகபட்சமாக ஓமர்சாய் 18, பிரப்சிம்ரன் சிங் 18, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 26 ரன்களை எடுத்தார்கள். பெங்களூரு அணிக்கு அதிகபட்சமாக ஹேசல்வுட், சூயஸ் சர்மா தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

ஒரே திட்டம்:

அடுத்து விளையாடிய பெங்களூரு அணிக்கு பில் சால்ட் 56*, விராட் கோலி 12, மயங் அகர்கர் 19, கேப்டன் ரஜத் படிதார் 15* ரன்களை அடித்தனர். அதனால் 10 ஓவரிலேயே 106/2 ரன்களை எடுத்து வென்ற பெங்களூரு 9 வருடங்கள் கழித்து ஃபைனல் சென்றது. மறுபுறம் போராடாமலேயே தோற்ற பஞ்சாப் குவாலிஃபயர் 2 போட்டியில் விளையாட உள்ளது.

இந்த வெற்றிக்கு முக்கியமான நேரத்தில் 3 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றிய சூயஸ் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். குறிப்பாக 3 ஓவரில் 17 ரன்கள் மட்டும் கொடுத்த அவர் ஸ்டோய்னிஸ், சசாங் சிங், முசீர் கான் என 3 அதிரடி பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை சொற்ப ரன்னில் எடுத்தார். இந்நிலையில் ஸ்டம்பை டார்கெட் செய்ய வேண்டும் என்பதே தம்முடைய முதன்மையான ஒரே பவுலிங் திட்டம் என்று சூயஸ் கூறியுள்ளார்.

- Advertisement -

ஜூன் 3இல் வெறித்தனம்:

மேலும் ஜுன் 3ஆம் தேதி ஃபைனலில் ஆர்சிபி கோப்பையை வென்ற பின் வெறித்தனமாக வெற்றியை கொண்டாடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது வெளிவருமாறு. “என்னுடைய பயிற்சியாளர்கள் எனக்கு ஒரே ஒரு வேலையை மட்டுமே கொடுத்துள்ளனர். அது லெக்பிரேக், கூக்லி, ஃப்ளிப்பர் அல்லது வேறு எந்த வேரியேஷன் பந்தை வீசினாலும் அதை ஸ்டம்ப்பை டார்கெட் செய்து வீச வேண்டும்”

இதையும் படிங்க: ஆர்சிபி’யிடம் பஞ்சாப் தோற்க இதான் காரணம்.. இன்னும் போரில் தோற்கல.. மறக்காம வருவோம்.. ஸ்ரேயாஸ் பேட்டி

“கூக்லி என்னுடைய ஸ்டாக்கில் இருக்கக்கூடிய முக்கியமான பந்தாகும். அத்துடன் பிட்ச்சில் எனக்கு கொஞ்சம் உதவி கிடைத்தது. இந்த வெற்றியால் கொஞ்சம் அமைதியாகவே கொண்டாடுகிறோம். ஜூன் 3ஆம் தேதி கோப்பையை வென்ற பின் நான் வெறித்தனமாக கொண்டாடுவேன்” என்று கூறினார்.

- Advertisement -