டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைக்க காத்திருக்கும் சூரியகுமார் யாதவ் – விவரம் இதோ

SKY
- Advertisement -

மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நவம்பர் 23-ஆம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று முடிந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்திய அணி ஒரு வெற்றியுடன் முன்னிலை பெற்றுள்ளது.

அதனை தொடர்ந்து இரண்டாவது டி20 போட்டியானது நாளை நவம்பர் 26-ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக விளையாடும் சூரியகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் முதல் இந்திய வீரராக ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார்.

- Advertisement -

அந்த வகையில் டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக மூன்று அரைசதங்களை இந்திய அணி சார்பாக அடித்த வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோருடன் தற்போது சூரியகுமார் யாதவும் சமநிலையில் உள்ளார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான நாளைய இரண்டாவது டி20 போட்டியில் அவருக்கு மாபெரும் சாதனையை நிகழ்த்த வாய்ப்பு காத்திருக்கிறது. அந்த வகையில் நாளைய இரண்டாவது டி20 போட்டியில் மேலும் ஒரு அரைசதத்தை சூரியகுமார் யாதவ் அடிக்கும் பட்சத்தில் டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக நான்கு அரைசதங்களை அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.

- Advertisement -

அதேபோன்று ஒருவேளை அவர் மூன்றாவது போட்டியிலும் அரைசதம் அடிக்கும் பட்சத்தில் டி20 கிரிக்கெட்டில் 14 ஆண்டு கால சாதனையை முறியடிக்கவும் வாய்ப்பிருக்கிறது. அதாவது இதுவரை டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக நான்கு அரை சதங்கள் அடித்த வீரர் என்ற பட்டியலில் பிரெண்டன் மெக்கல்லம் முதல் வீரராக சாதனையை தக்க வைத்துள்ளார்.

இதையும் படிங்க : இம்முறை மிஸ் ஆகக்கூடாது.. தெ.ஆ மண்ணில் சரித்திரம் படைக்க பிசிசிஐ கையிலெடுக்கும் பிளான்

ஒருவேளை மூன்றாவது போட்டியிலும் சூரியகுமார் யாதவ் அரைசதம் அடித்தால் டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 அரைசதங்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement