சூரியகுமார் யாதவ் பேட்டிங்கில் அசத்த வேண்டிய நேரம் வந்தாச்சு.. கப்புக்கு அவரோட பார்ம் முக்கியம் – விவரம் இதோ

Suryakumar Yadav
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அண்மையில் பிசிசிஐ-யின் மூலம் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் சூரியகுமார் யாதவே கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே வேளையில் துணை கேப்டனான சுப்மன் கில் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அக்சர் பட்டேல் துணை கேப்டனாக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

சூரியகுமார் யாதவ் ரன் குவிக்க வேண்டியது அவசியம் :

இப்படி சுப்மன் கில் இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டது பலரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய வேளையில் கேப்டன் சூரியகுமார் யாதவும் விரைவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இந்தியா நடப்பு சாம்பியனாக இந்த டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க இருக்கிறது.

- Advertisement -

அதன் காரணமாக மீண்டும் ஒருமுறை கோப்பையை கைப்பற்றி அடுத்தடுத்த கோப்பைகளை வென்ற அணியாக சாதனை நிகழ்த்த வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. அப்படி இந்திய அணி டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்ற வேண்டுமெனில் கேப்டன் சூர்யகுமார் யாதவ்வின் பேட்டிங் ஃபார்மும் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

ஏனெனில் கடந்த ஓராண்டாகவே அவரது தலைமையில் இந்திய அணி தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று வந்தாலும் தனிப்பட்ட முறையில் அவரது பேட்டிங் ஃபார்ம் படு மோசமாக இருந்து வருகிறது. அதோடு இந்த ஆண்டு முழுவதும் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் விளையாடி வருகிறார். அதனால் அவர்மீது கடுமையான விமர்சனங்களும் இருந்து வருகின்றது.

- Advertisement -

இவ்வேளையில் எதிர்வரும் டி20 உலக கோப்பையை தொடரை இந்திய அணி கைப்பற்ற வேண்டுமெனில் சூரியகுமார் யாதவ் பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியம் என்று பலரும் கூறி வருகின்றனர். டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நியூசிலாந்து தொடர் மட்டுமே எஞ்சியுள்ளது.

இதையும் படிங்க : திறமையான ரிஷப் பண்ட் ஸ்டுப்பிட்ன்னு.. திட்டு வாங்காம அசத்த இப்படி மாற்றி விளையாடனும்.. மிஸ்ரா அட்வைஸ்

அதனால் நியூசிலாந்து தொடரில் அவர் ரன் அடிக்கும் பட்சத்தில் நிச்சயம் அதில் கிடைக்கும் நம்பிக்கை வைத்து டி20 உலக கோப்பை தொடரிலும் அசத்த முடியும். இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் மட்டும் பார்முக்கு வந்தால் நிச்சயம் 3ஆவது டி20 உலக கோப்பை நமக்கு வரும் என்பது உறுதி.

Advertisement