டெல்லியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் இந்திய அணியில் முதன்மை விக்கெட் கீப்பர்களில் ஒருவராக திகழ்கிறார். இதுவரை அதிரடியாக விளையாட வேண்டிய ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் தடுமாறி வரும் அவர் இந்திய அணியில் நிலையான இடத்தைப் பிடிக்கவில்லை. இருப்பினும் நிதானமாக விளையாட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக பேட்டிங் செய்யும் அவர் இந்தியாவின் மேட்ச் வின்னராக வலம் வருகிறார்.
மேலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் ரிஷப் பண்ட் படைத்துள்ளார். அத்துடன் தோனியை முந்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் மற்றும் சதங்கள் அடித்த இந்திய கீப்பர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை விட பண்ட் சிறந்த வீரர் என்று பலரும் பாராட்டி வருகிறார்கள்.
ஸ்டுப்பிட் விமர்சனம்:
அப்படிப்பட்ட ரிசப் பண்ட் பல போட்டிகளில் அதிரடியாக விளையாடுகிறேன் என்ற பெயரில் குருட்டுத்தனமாக அவுட்டாகி இந்திய அணிக்கு பின்னடைவையும் கொடுத்து வருகிறார். எடுத்துகாட்டாக 2025 சிட்னி போட்டியில் இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கிய போது மோசமான ஷாட்டை அடித்து விக்கெட்டை பரிசளித்த அவரை ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் நேரலையில் ஸ்டுப்பிட் என்று விமர்சித்தார்.
இந்நிலையில் திறமையான ரிஷப் பண்ட் ஸ்டுப்பிட் என்ற விமர்சனங்களை வாங்கி கட்டிக் கொள்ளாமல் அசத்துவதற்கு ஒரே மாதிரியாக விளையாடும் பாணியை கைவிட வேண்டும் என்று முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் மேலே எனக்குப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அவரைப் போன்ற வீரர் தன்னுடைய ஆட்டத்தை மாற்றி விளையாட வேண்டும்”
மிஸ்ரா அட்வைஸ்:
“2018 முதல் விளையாடி வரும் அவரை இனிமேலும் நீங்கள் இளம் வீரர் என்றழைக்க முடியாது. ஒரு கட்டத்திற்கு பின் நீங்கள் உங்களது ஆட்டத்தை மாற்றியமைப்பது முக்கியம். ஏனெனில் எதிரணிகள் உங்களை நெருக்கமாக பார்த்து புரிந்து கொண்டு உங்களுக்கு எதிராக திட்டங்களை வகுப்பார்கள். அதனால் நான் ஒரே வழியில் விளையாடுவேன் என்று உங்களால் சொல்ல முடியாது. அதை நீங்கள் தவிர்க்க வேண்டும்”
இதையும் படிங்க: இப்படி ஆடுனா மக்கள் மறந்துடுவாங்க.. கொஞ்சம் ஜாக்கிரதை.. சஞ்சு சாம்சனுக்கு – சீக்கா வார்னிங்
“குறிப்பிட்ட ஷாட் குறிப்பிட்ட பிட்ச்சில் வேலை செய்யவில்லை என்றால் அதை விளையாடாதீர்கள். அதை விட்டுவிட்டு நான் இப்படித்தான் விளையாடுவேன் என்று சொல்லாதீர்கள். ஏனெனில் நீங்கள் 4 – 5 போட்டிகளில் அதே தவறை செய்தால் அணியிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது. நீங்கள் 4, 6 அடிப்பதற்கு எல்லா பிட்ச்களும் ஒரே மாதிரியாக இருக்காது. எனவே சூழ்நிலைகளை எப்படி கையாள்கிறீர்கள் என்பது உங்களைப் பொறுத்தது” என்று கூறினார்.



