இப்படி ஆடுனா மக்கள் மறந்துடுவாங்க.. கொஞ்சம் ஜாக்கிரதை.. சஞ்சு சாம்சனுக்கு – சீக்கா வார்னிங்

Cheeka and Sanju Samson
- Advertisement -

அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெறயிருக்கும் 2026 டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி பி.சி.சி.ஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் துணை கேப்டனான சுப்மன் கில் அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இஷான் கிஷனுக்கு உலககோப்பை அணியில் இடம் கிடைத்துள்ளது. அதேவேளையில் சஞ்சு சாம்சன் முதன்மை கீப்பராக இடம்பிடித்துள்ளார்.

உலககோப்பை தொடருக்கு முன்னர் சஞ்சு சாம்சனுக்கு : சீக்கா வார்னிங்

சுப்மன் கில்லின் மோசமான பேட்டிங் பார்ம் காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் விளையாடவில்லை. அதேநேரத்தில் அப்படி கில் வெளியேற்றப்பட்டு தனக்கு கிடைத்த வாய்ப்பில் 22 பந்துகளில் 37 ரன்கள் அடித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதனை தொடர்ந்து அவருக்கு டி20 உலககோப்பை அணியிலும் வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

அதனால் அபிஷேக் சர்மாவுடன் இணைந்து அவரே டி20 உலககோப்பை அணியிலும் துவக்க வீரராக விளையாடுவார் என்பது உறுதி. இந்நிலையில் எதிர்வரும் 2026 டி20 உலககோப்பை தொடருக்கு முன்னதாக சஞ்சு சாம்சனை எச்சரித்து சில கருத்துக்களை முன்னாள் இந்திய வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் அவர் கூறியதாவது : 37 ரன்களில் ஆட்டமிழக்க கூடாது. முடிந்த அளவு அந்த 37 ரன்களை 73 ரன்களாக மாற்ற முயற்சிக்க வேண்டும். அப்படி பெரிய ரன்களை அடித்தால் உங்களை யாராலும் நீக்க முடியாது. 30 முதல் 40 ரன்களை நீங்கள் அடித்தால் மக்கள் உங்களை மறந்து விடுவார்கள். அதனால் பெரிய ரன்களை அடிக்க முயற்சியுங்கள் என்று ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் இந்திய அணியின் பேட்டிங் ஆழம் குறித்து பேசிய அவர் : தற்போதைய இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மிக பலமாக உள்ளது. குறிப்பாக 8 ஆம் இடம் வரை ரன்களை குவிக்கும் வீரர்கள் இருக்கின்றனர். சூரியகுமார் யாதவ் மட்டும் பழைய பார்முக்கு வந்தால் எதிரணிகளை நொறுக்கி விடுவார். டாப் ஆர்டரில் திலக் வர்மா அசத்தலான ஆட்டத்தை விளையாடுகிறார்.

இதையும் படிங்க : சஞ்சு சாம்சனா? இஷான் கிஷனா? டி20 உலக கோப்பையில் துவக்க வீரர் யார்? – விவரம் இதோ

அதேபோன்று ஹார்டிக் பாண்டியாவும் மிரட்டலான பார்மில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதனால் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் எந்தவொரு அணியையும் வீழ்த்தும் அளவிற்கு பலமாக உள்ளதாக கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement