- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கடைசி வரை நான் நின்னா இது நடக்கும்னு நம்புனேன்.. வெற்றி குறித்து – சூரியகுமார் யாதவ் பேட்டி

இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகளுக்கு இடையேயான நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற அமெரிக்கா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி :

நான் கடைசி வரை நிக்கனும்னு நெனச்சேன் : சூரியகுமார் யாதவ்

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 49 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் என 84 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அவரது அசத்தலான ஆட்டம் காரணமாகவே இந்திய அணி நல்ல நிலையை எட்டியது.

- Advertisement -

அதனை தொடர்ந்து 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய அமெரிக்கா அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சுக்கு எதிராக 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றிருந்தது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய சூரியகுமார் யாதவ் கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டியில் அதிகபட்ச அழுத்தத்தை உணர்ந்தேன். 77 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்த போது சற்று கடினமாகத்தான் இருந்தது. ஆனாலும் இதுபோன்று சூழ்நிலையில் நான் பலமுறை விளையாடி உள்ளேன்.

- Advertisement -

இதையும் படிங்க : பும்ரா ஆடல.. இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – சூரியகுமார் யாதவ் அறிவிப்பு

அதிலும் குறிப்பாக மும்பையில் உள்ள மைதானத்தில் நான் எவ்வளவோ பேட்டிங் செய்துள்ளேன். எனவே நிச்சயம் எனக்கு தெரியும் கடைசி வரை நான் நின்றால் போட்டியை திருப்ப முடியும் என்று நினைத்து இறுதிவரை நின்று விளையாடினேன். அதன்படியே இறுதிவரை விளையாடியதால் போட்டியை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -