இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகளுக்கு இடையேயான நடப்பு 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான மூன்றாவது லீக் ஆட்டமானது சற்று முன்னர் மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற அமெரிக்கா அணியின் கேப்டன் மோனாக் பட்டேல் முதலில் தங்களது அணி பந்து வீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியானது பேட்டிங் செய்து வருகிறது.
முதல் போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆடல : சூரியகுமார் யாதவ் அறிவிப்பு
இந்நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்ட பிறகு இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்த எதிர்பார்ப்புக்கு பதில் அளிக்கும் வகையில் சூரியகுமார் யாதவ் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்த போட்டியில் நாங்கள் முதலில் பேட்டிங் செய்யவே விரும்புகிறோம்.
ஏனெனில் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நான் இந்த மைதானத்தில் நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளதால் இங்குள்ள தன்மை எனக்கு மிகவும் நன்றாக தெரியும். இரண்டாம் பாதியில் டியூ வரும் என்பதால் அதிகளவு ரன்களை குவிக்க விரும்புகிறோம். நடப்பு சாம்பியனாக இந்த தொடரில் பங்கேற்பது அழுத்தம் தான். ஆனாலும் இது ஒரு புதிய தொடராக நாங்கள் நினைத்து சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவோம்.
இன்றைய போட்டியில் வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன் ஆகியோர் இடம் பெறவில்லை. அதேபோன்று வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் முகமது சிராஜ் விளையாடுகிறார் என்று தெளிவாக சூரியகுமார் யாதவ் அறிவித்தார். அதன்படி அமெரிக்க அணிக்கு எதிரான இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : இஷான் கிஷன் தான் டி20 வேர்ல்டுகப்போட ஓப்பனர்.. இதுதான் காரணம் – சூரியகுமார் யாதவ் அறிவிப்பு
1) இஷான் கிஷன், 2) அபிஷேக் சர்மா, 3) திலக் வர்மா, 4) சூரியகுமார் யாதவ், 5) ரிங்கு சிங், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ஷிவம் துபே, 8) அக்சர் படேல், 9) வருண் சக்கரவர்த்தி, 10) அர்ஷ்தீப் சிங், 11) முகமது சிராஜ்.



